தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிராம்பட்டினம் பகுதி வாக்காளர்கள் செலுத்தும் வாக்குகளின் அடிப்படையில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு நிர்ணயிக்கப்படுவதாக அரசியல் ஆர்வலர்கள் கூறிவரும் நிலையில், இந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள்-கல்வியாளர்கள்-ஜமாஅத் பிரமுகர்கள்-கிராம பஞ்சயாத்தார்கள் ஆகியோரிடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் செலுத்த இருக்கும் உங்களின் வாக்கு யாருக்கு ? என்ற கேள்வியை முன்வைத்து ஆய்வு நடத்தியதில் 21 கோரிக்கைகளை முன்வைத்தனர். இவற்றை எந்த வேட்பாளர் நிறைவேற்றி தர உறுதி அளிக்கின்றாறோ அவருக்கே எங்கள் பகுதி மக்களின் வாக்கு என தெரிவித்து இருந்தனர்.
அதிரையை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் இப்ராஹீம் அலி. எம்.பி.ஏ பட்டதாரி. அவசர காலங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளைத் தேடிச்சென்று இரத்த தானம் தொடர்ந்து வழங்கி வருபவர். இந்தநிலையில் அதிரை வருகை தந்த தேமுதிக - தமாகா - மக்கள் நலக்கூட்டணி சார்பில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில் குமார் அவர்களை சந்தித்து, அதிரை ஆர்வலர்கள் வைத்துள்ள பொதுநல கோரிக்கைகள் - எதிர்பார்ப்புகள் குறித்த பட்டியலை வழங்கினார்.
அதிராம்பட்டினம் சுற்றுவட்டார பகுதி மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் கோரிக்கைகள்:
1. திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டப் பணியை விரைந்து முடிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
2. அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையில் அடிக்கடி நிகழும் விபத்தால் அதிகளவில் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்கும் பொருட்டு அதிரை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி 24 மணிநேரம் இயங்கும் மருத்துவமனையாக மாற்ற வேண்டும்.
3. அதிராம்பட்டினத்தில் தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்.
4. அதிராம்பட்டினம் கடற்கரையை நவீனப்படுத்தி மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும்.
5. அதிராம்பட்டினத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்.
6. அதிராம்பட்டினத்தை புதிய தாலுகாவாக தரம் உயர்த்தி அறிவிக்க வேண்டும்.
7. அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனை எதிரே உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் புறநகர் பகுதி புதிய பேரூந்து நிலையம் அமைக்க வேண்டும்.
8. தஞ்சை மாவட்டத்தில் மிகப்பெரிய பரப்பளவைவும், மக்கள் தொகையையும் கொண்டுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சியை பொதுமக்கள் நலன் கருதி நிர்வாக வசதிக்காக ஏரிபுறக்கரை வடக்கு - தெற்கு என இரண்டாக பிரிக்க வேண்டும்.
9. அதிராம்பட்டினம் அடுத்துள்ள ஏரிபுறக்கரை ஈசிஆர் சாலையை ஒட்டி அமைந்துள்ள இரண்டு ஏரிகளையும் ஆளப்படுத்தி படகு சவாரி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
10. ஏரிபுறக்கரை ஈசிஆர் சாலையில் அரசிற்கு சொந்தமான இடத்தில் தென்னை கொப்பரை கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
11. அதிராம்பட்டினம் கடற்பகுதியில் உள்ள அரசின் நிலத்தில் நவீன கட்டமைப்புடன் கூடிய பூங்கா ஏற்படுத்த வேண்டும். இவற்றை சுற்றுலா பகுதியாக அறிவிக்க வேண்டும்.
12. அதிராம்பட்டினம் பகுதியில் ஏற்படும் மின் இழப்பு மற்றும் சீரான மின்சாரம் வழங்குவதற்காக துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
13. அதிராம்பட்டினம் சிஎம்பி லேன் - மிலாரிக்காடு - மேலத்தெரு - பிலால் நகர் - ஈசிஆர் சாலை ஆகியவற்றை இணைத்து புதிய கிராம இணைப்பு சாலை ஏற்படுத்தி அதில் மினி பேருந்து இயக்கும் வசதி ஏற்படுத்த வேண்டும்.
14. அதிராம்பட்டினம் - மதுக்கூர் வழியாக மன்னார்குடி வரை அரசு போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும்.
15. தினமும் அதிராம்பட்டினத்திலிருந்து சென்னை சென்று வர கூடுதலாக அரசு பேருந்து இயக்க வேண்டும்.
16. அதிராம்பட்டினம் பெரிய மீன் மார்க்கெட் பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய மீன் விற்பனைக் கூடம், ஆட்டுத்தொட்டி கூடம் அமைக்க வேண்டும்.
17. சட்டமன்ற தொகுதி மேம்பாடு நிதி மூலம் அதிராம்பட்டினம் நடுத்தெரு பகுதியில் துணை நூலகம் அமைக்க வேண்டும்.
18. அதிராம்பட்டினத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு குளங்களை தூர் வாரி வருடந்தோறும் ஆற்று நீர் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
19. அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை காலங்களில் ஏற்படும் வெள்ள அபாயத்தை தடுக்கும் விதத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வடிகால் வாய்க்கால் தூர் வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
20. பேரூராட்சி பகுதிகளில் தேங்கும் குப்பை கூளங்கள் அள்ளிச்செல்ல சட்டமன்ற தொகுதி மேம்பாடு நிதி மூலம் கூடுதலான டிராக்டர்கள் வழங்க வேண்டும்.
21. குடிநீர் பற்றாக்குறையை போக்க கடற்கரைத்தெரு பகுதியில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவை கொண்ட நீர்தேக்க தொட்டி கட்டித்தரவேண்டும்.
Assalamu alaikum varah Masha Allah neengal kodutha Manu migavum sari anathaga irukindrana pothu makkaludaiya nalanai karuthil kondu thangal seithulla pathivu migavum sari ennudaiya oru cheinna vendugoll adiram pattinathil taxi standum auto standum irupatharku sariyana oru idam amaithal tholilalargaluku konjam vasathiyaga irukum nandri assalamu alaikum
ReplyDeleteAssalamu alaikum varah Masha Allah neengal kodutha Manu migavum sari anathaga irukindrana pothu makkaludaiya nalanai karuthil kondu thangal seithulla pathivu migavum sari ennudaiya oru cheinna vendugoll adiram pattinathil taxi standum auto standum irupatharku sariyana oru idam amaithal tholilalargaluku konjam vasathiyaga irukum nandri assalamu alaikum
ReplyDelete