தமிழ்நாட்டில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கோடை வெயிலானது கலப்பின பசுக்களில் பால் உற்பத்தி மற்றும் இனப்பெருக்கத்தினை பாதிக்ககூடும், அனைத்து கால்நடைகளிலும் அழற்சியை ஏற்படுத்தி அவற்றின் நோய் எதிர்ப்புத் திறனையும் பாதிக்கவும் வாய்ப்புள்ளது.
பாலின் அளவு, பாலில் கொழுப்பு மற்றும் கொழுப்பற்ற இதர திடப்பொருட்களின் அளவும் கோடைக்காலங்களில் குறைந்த விடுவதால் பால் உற்பத்தியாளர்களுக்கு லாபம் குறையக்கூடும். கால்நடைகளுக்கு சரியான கொட்டகை மற்றும் சுற்றுச்சுழலை ஏற்படுத்துவது, அறிவியல் ரீதியான தீவன மேலாண்மை கையாளவதன் மூலம் கால்நடைகளில் ஏற்படும் இழப்பைத்தவிர்க்கலாம்.
கோடையில் கால்நடைகளுக்கு சரியான அளவு இடவசதியுடன் கொட்டகை அமைத்து, கொட்டகையைச் சுற்றி நிழல்தரும் மரங்கள் வளர்ப்பதன் மூலம் கொட்டகையினுள் நிலவும் வெப்பத்தை தணிக்கலாம்.
கொட்டகை கூரை அலுமினிய தகடுகளால் அமைத்திருந்தால் உட்புறம் கருப்பு மற்றும் வெளிப்புறத்தில் வெள்ளை வர்ணம் உட்புறம் வெட்பத்தை குறைக்கலாம்.
ஓடு மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் கூரையாக இருப்பின் தென்னை, பனை ஓலைகள் தென்னை நார்க் கழிவு அல்லது உலர்ந்த புற்கள் பரப்பி அதன் மேல் நீரைத் தெளித்து பராமரிக்கலாம் கால்நடைகளை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது.
பசுந்தீவனம் மற்றும் கலப்பு தீவனம் கொடுக்கும் அளவை அதிகரித்து உலர் மற்றும் நார் தீவனம் அளவை குறைக்கவேண்டும் நார் தீவனங்களை சிறுதுண்டுகளாக நறுக்கி கொடுக்க வேண்டும்.
உலர் தீவனங்களை வைக்கோல் மற்றும் தட்டை மீது உப்பு அல்லது நாட்டு சர்க்கரை கலந்த நீரை தெளித்து பதப்படுத்தி பின் வழங்கவேண்டும்.
பசுந்தீவனத்தில் அதிக புரதச்சத்து கொண்ட குதிரை மசால், முயல் மசால், வேலிமசால் போன்ற பயறு வகை தீவனங்கள் அளிக்க வேண்டும்.
போதிய அளவு பசுந்தீவனம் கிடைக்கவில்லையெனில் மர இலைகள், மரவள்ளிக்கிழங்கு திப்பி போன்ற ஈரப்பதம் அதிகமுள்ள தீவனம் அளிக்க வேண்டும்.
பகல்வேலையில் பசுந்தீவனத்தையும், இரவு நேரங்களில் வைக்கோல் போன்ற உலர்ந்த தீவனத்தையும் அளிப்பதுடன் ஒரே நேரத்தில் அதிக அளவு அளிப்பதை தவிர்த்து அளவைக் குறைத்து பலமுறை தீவனம் அளிக்க வேண்டும்.
தாது உப்புகளின் இழப்பை சரிகட்ட தாது உப்புக் கலவை 50 சதவீதம் அதிகரித்து கொடுக்க வேண்டும்.
மாடுகளுக்கான குடிநீர் தொட்டிகளின்மேல் சூரிய வெப்பம் தாக்காவண்ணம் கூரை அமைத்து, கால்நடைகளுக்கு எப்போதும் குளிர்ந்த குடிநீர் கிடைக்கச் செய்யவேண்டும்.
கோடை அயற்சியைத் தணிக்கவல்ல மூலிகை மருந்துகள், அல்லது நெல்லிக்காய், துளசி அஸ்வகந்தா போன்ற மூலிகைகளை மாடுகளுக்கு கொடுக்கலாம் தவிர 100-200 கிராம் அசோலாவை தீவனத்தில் கலந்து கொடுக்கலாம்.
கோடையில் கால்நடைகளில் வெப்ப அயர்ச்சி நோய், வெப்ப மடிவீக்கம், இளஞ்சிவப்பு கண்நோய் மற்றும் கல்லீரல் தட்டை புழுக்கள் தாக்க வாய்ப்புள்ளது. இதனைத் தவிர்க்க நேரடி சூரிய ஒளி தாக்கத்திலிருந்து கால்நடைகளை காத்து, தினமும் இரண்டு வேளை குளிப்பாட்ட வேண்டும். அதிகாலை மற்றும் மாலை வேலைகளில் தீவனத்தை அதிகரித்து பிற நேரங்களில் குறைத்துக்கொண்டு அதிக அளவு குளிர்ந்த குடிநீர் அளிக்க வேண்டும். கால்நடைகளை குளங்கள், நீர்நிலைகளுக்கு அருகில் வளரும் புற்களை மேயாமலும், தண்ணீர் வற்றிய நீர்நலைகளில் நத்தைகள் காணப்பட்டால் அத்தண்ணீரை அளிக்காமலும் பாதுகாக்க வேண்டும்.
கோடைக்காலங்களில் கால்நடைகளில் ஏற்படும் நோய் தாக்கத்தை தாமதம் செய்திடாமல் அருகிலுள்ள கால்நடை நிலையங்களை அணுகி உரிய மருத்துவ வசதி பெற்றுக்கொள்ளவும் தஞ்சாவூர் மாவட்ட விவசாய பெருமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.