.

Pages

Friday, April 29, 2016

அதிரையில் 7 மணி நேர மின் தடையால் பொதுமக்கள் அவதி !

அதிராம்பட்டினம் ஏப்-29
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு மதுக்கூர் வாடியக்காடு 33 கே.வி.ஏ துணை மின் நிலையத்தின் மின் பாதை வழியாக மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 11.20 மணியளவில் மின் பாதையில் ஏற்பட்ட திடீர் பழுதால் சுமார் 7 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். மீண்டும் காலை 6.10 மணியளவில் மின் இணைப்பு வழங்கப்பட்டது. இரவு நேர மின்தடையால் முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மேலும் குறைந்த மின்னழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் வீடுகளில் பயன்படுத்திவரும் குளிர்சாதனப் பெட்டி, ஏர்கண்டிஷன், குடிநீர் மின்மோட்டார், கிரைன்டர் உள்ளிட்ட மின்சாதனங்கள் இயங்குவதில்லை. இந்த பகுதிகளில் திடீர் மின்தடை ஏற்படாமலும், சீரான மின்சாரம் வழங்கவும் மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

3 comments:

  1. நேற்று இரவு நடந்த 7 மணி நேர மின்வெட்டு நிறைய சந்தேகங்களை எழுப்பியுள்ளது. தேர்தல் நேரங்களில் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் இந்த மாதிரி சித்து வேளைகளில் ஈடுபடுவது எப்போதும் நடப்பதுதான், பெரிய நகரங்களில் இது போல சதி வேலைகள் நடந்தால் ஆளும் உளவுத்துறை கண்டு பிடித்துவிடும்,சிறுநகரங்களில்,கிராமங்களில் ஆளும் கட்சி ஆராய்வது சற்று சிரமம்தான். ஆனாலும் இது போன்ற முக்கியமான நேரங்களில் ஏற்படும் மின்வெட்டால் ஆதாயம் அடைவது பெரும்பாலும் எதிர்கட்சிகளே! ஓட்டுக்கு பணம் கொடுத்து வெல்வதை விட ஒரே இரவில் ஆளும் கட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்திவிடலாம் என்பது நிச்சயமான உண்மை.
    இது போன்ற மின்தடை பல ஊர்களில் பல தேர்தல் சமயத்தில் நடந்திருக்கிறது. டெக்னிக்கலாக ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் நாம் சந்தேக கண்ணோடு இருப்பதுதான் சரி...எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ!

    ஆனாலும் கடந்த ஆட்சியைவிட நடப்பு ஆட்சியில் மின்தடை குறைவே (நான் ஆளும் கட்சி சப்போர்ட்டர் அல்ல) என்பதை அதிரை மக்கள் நன்கு அனுபவித்து இருப்பார்கள். சென்னை போன்ற பெரு நகரங்களில் மாதம் ஒருமுறை போகும் 8-10 மணி நேர மின்வெட்டு 90% இல்லை என்றே கூறலாம். புற நகர்களில் மட்டும் அதை செய்கிறார்கள் என்பது நாளிதழ்களில் அறிய முடிகிறது.

    இதில் சதி வேலையா? அல்லது டெக்னிகல் பிரச்சினையா? என்பதை நாம் ஆளும் அரசுக்கு தெரியபடுத்த கடமைபட்டுள்ளோம்.

    அதிரையர்கள் மனதில் எச்சரிக்கை மணி அடிக்கவே இந்த பதிவு.

    ReplyDelete
  2. This was careless of EB line man , he drunk and sleep in mid night.

    ReplyDelete
  3. மின்வெட்டால் ஆதாயம் அடைவது பெரும்பாலும் எதிர்கட்சிகளே! ஓட்டுக்கு பணம் கொடுத்து வெல்வதை விட ஒரே இரவில் ஆளும் கட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்திவிடலாம் என்பது நிச்சயமான உண்மை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.