திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் மகேந்திரன் அவர்கள் அதிராம்பட்டினம் பேரூர் திமுக - காங்கிரஸ் - மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளை இன்று இரவு அந்தந்த கட்சிகளின் அலுவலகங்களில் மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆதரவு கோரினார்.
அதிரை பேரூர் தமுமுக - மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அஹமது ஹாஜா, மனிதநேய மக்கள் கட்சி அதிரை பேரூர் செயலாளர் காலித் அஹமது, துணை செயலாளர் இத்ரீஸ் அஹமது, தமுமுக அதிரை பேரூர் செயலாளர் சாதிக் பாட்சா, துணை செயலாளர் தமீம், பொருளாளர் ஆதம் செய்யது முஹம்மது புஹாரி, கமாலுத்தீன், சாகுல் ஹமீது உள்ளிட்ட ஏராளமான தமுமுக -மமக வினர் வரவேற்பு அளித்தனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅன்று 1965-களில் எனக்கு பம்பரம், பளிங்கு, கிளித்தட்டு, தொட்டு விளையாடு, லாக்கு, போன்ற அனேக விளையாட்டுக்களை விளையாடும் வயசு,
அன்றைய அசைக்க முடியாத சேர்மன் என்று பேர் போனவர் உங்கள் எல்லோருக்கும் தெரியும், அவர் வீட்டு (மர்ஹூம்) அஹமது தம்பி அவர்களின் திருமணம்.
செக்கடித் தெரு,
அப்போது அங்கே தென்னங் கீற்றுப் பந்தல்,
தேங்காய்க் குலைகள்,
வாழைமரத் தோரணங்கள்,
தென்னங் கீற்றேல்லாம் வண்ணங்களால் பூசப்பட்டிருந்தது.
அன்றே அது வெரி பவர்புல் கல்யாணமாக இருந்தது. வெகு சிறப்பாக முடிந்தது.
அதிரை வெகுவாக குளுமையாக இருந்தது. அதிரை மக்களும் ரொம்பவே குளிர்ச்சியாக இருந்தார்கள்.
இன்றைய அதிரையர்கள் எதையோ திருட்டு கொடுத்த மாதிரி அங்கும் இங்கும் அலைகின்றனர். இதெற்கெல்லாம் என்ன காரணம்?
ஷிர்க்கு மட்டும் ஒழிந்தால் போதுமா?
மனதில் உள்ள கருங் கசடும் சேர்ந்தே ஒழியனும்.
என்றைக்கு கசடு ஒழிகின்றதோ அன்றைக்கே......................?
K.M.A. Jamal Mohamed.
President – PKT Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive Member
Adirampattinam-614701.
//அன்று 1965-களில் எனக்கு பம்பரம், பளிங்கு, கிளித்தட்டு, தொட்டு விளையாடு, லாக்கு, போன்ற அனேக விளையாட்டுக்களை விளையாடும் வயசு,//
ReplyDeleteஉங்களுடைய இளமைக்கால நினைவலைகளை மழையின் துளிப்போல் வர்ணித்திருக்கிறீர்கள் அன்றைய காலக்கட்டத்தில் ஊரில் நடந்த வைபவங்கள், கந்தூரி. வீரவிளையாட்டு போன்றவைகள் இன்றைய இளஞ்சிறார்கள் காணமுடியவில்லை. சமுதாயத்தில் பெரும் சாபம் நிகழப்போவதுப்போல் கந்தூரியை தடைசெய்ய ஒரு கூட்டம் கலக்டரை பார்த்து வருடந்தோறும் மனு அளிக்கிறார்கள் அவர்களை இந்த அரசியல் நேரத்தில் உண்மையான சாயத்தை பார்க்கலாம். மக்களிடம் ஒட்டு வாங்க காவடி தூக்க அவர்கள் தயார்.. த்தூ ...இதெல்லாம் ஒரு பொலப்பா.
//அன்றைய காலக்கட்டத்தில் ஊரில் நடந்த வைபவங்கள், கந்தூரி. வீரவிளையாட்டு போன்றவைகள் இன்றைய இளஞ்சிறார்கள் காணமுடியவில்லை. சமுதாயத்தில் பெரும் சாபம் நிகழப்போவதுப்போல் கந்தூரியை தடைசெய்ய ஒரு கூட்டம் கலக்டரை பார்த்து வருடந்தோறும் மனு அளிக்கிறார்கள் //
ReplyDeleteஏனப்பா, இப்படிச் சாடுகின்றீர்? மார்க்க அங்கீகாரம் இல்லாத கொண்டாட்டங்களுக்கு இஸ்லாத்தில் இடமில்லை. மாற்று மதச் சடங்குகள் அவை என்பதால், ADTயினர் அவற்றுக்குத் தடையாக நிற்கின்றார்கள். பட்டுக்கோட்டையில் நடந்த RDO உடனான சமாதானக் கூட்டத்தில், அந்த அரசு அதிகாரி, "நீங்கள் கந்தூரி நடத்துவதற்கு ஏதேனும் ஒரு ஆதாரத்தைக் காட்டுங்கள்" என்ற கேள்வியைக் கந்தூரிக் கமிட்டியிடம் கேட்டாரே பார்க்கலாம். அப்போது கந்தூரிக் கமிட்டி எச்சிலை விழுங்கி, ஏமாற்றத்தில் மூழ்கிப் போனதைக் கண்டு கந்தூரி எதிர்ப்பு அணியின் உடல்கள் சிலிர்த்தன!
மாற்று மத அதிகாரிக்குப் புலப்பட்டது, மஸ்தான் கனிக்குப் புலப்படாமல் போனது பற்றி, அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை!