1. கிராஅத் : சகோ. அஹமது கபீர்
2. ஜாவியா பள்ளி வளாகத்தில் AAMF'ன் சார்பாக புதிய அலுவகம அமைத்து அதில் கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக ஜாவியா நிர்வாகத்தினருக்கு அனுமதி கடிதம் கொடுப்பது என்ற முடிவையடுத்து, அடுத்த நாள் காலை ஹாஜி ஜனாப் M.S. சிஹாப்தீன் அவர்களின் தலைமையில் ஜாவியாவிற்கு சென்று இடம் பார்வையிடப்பட்டு உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ஜாவியா நிர்வாகத்தினருக்கு AAMF'ன் சார்பாக அனுமதி கோரி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
3.
ஹாஜி ஜனாப் M.S. ஷிஹாப்தீன் அவர்கள் தனது விருப்பமாகிய 'ஒவ்வொரு வருடமும் நடைபெறக்கூடிய இரு பெருநாள் தொழுகையை அனைத்து மஹல்லாவைச் சார்ந்த மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஒரே இடத்தில் தொழ வேண்டும் என்றும், இதற்காக தொலைத்தூரங்களிலிருந்து வரும் நமது சகோதரர்களுக்காக வாகன வசதியை ஏற்பாடு செய்து கொடுத்து, அத்தொழுகையை நமதூர் 'பெரிய ஜூம்ஆ' பள்ளியில் நடத்த வேண்டும் என்று தனது வேண்டுகோளை மீண்டும் அனைவரிடத்திலும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.
4. நமதூர் பொது நலன் தொடர்பான மூன்று முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை விரைவில் அணுகி துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன் படி மூன்று கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன,
முதல் கோரிக்கை :
பொருள் : அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் 24 மணி நேர சேவை வசதி செய்து தருவது தொடர்பாக.
ஐயா,
சேது பெருவழிச்சாலையில் அமையப்பெற்றுள்ள ஊர்களில் அதிராம்பட்டினமும் ஒன்று. ஏறக்குறைய அறுபதாயிரம் மக்கள் தொகையைக் கொண்டு வாழ்கின்ற இவ்வூரைச் சுற்றி ஏரிப்புறக்கரை, ராஜாமடம், மகிளங்கோட்டை, தொக்காலிக்காடு, பழஞ்சூர், மளவேனிக்காடு, நடுவிக்காடு, விலாரிக்காடு, உள்ளூர் புதுக்கோட்டை, மாளியக்காடு, சென்டாக்கோட்டை, பள்ளிகொண்டான், முதல் சேரி, நரசிங்கபுரம், போன்ற கிராமகங்களை உள்ளடக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது. இரவு நேரத்தில் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவ முதலுதவி என்பது பெரும் குறையாகவே காணப்பட்டு வருகின்றது. மருத்துவர்களும் இரவு நேரங்களில் கண் விழித்து நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்வது என்பது அரிதாகவே இருகின்றது. அவசர மருத்துவத்திற்காக பெரும் சிரமத்துடன் தொலைதூரத்தில் உள்ள குறிப்பாக திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை போன்ற ஊர்களுக்கு செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுகின்றன. அதோடு மட்டுமல்லாமல் இப்பகுதியில் அமைந்துள்ள சேது பெருவழிச்சாலையில் அடிக்கடி வாகன விபத்துகளும் நடந்து வருகின்றன. விபத்தில் பாதிக்கப்பட்டோரை நீண்ட தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் போதே உயிர் இழப்புகளும் ஏற்பட்டு விடுகின்றன. ஆகவே இதுபோன்ற சிரமங்களை கருத்தில் கொண்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், அதற்காக கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கவும் ஆவன செய்யும்மாறு தங்களை அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி !
இரண்டாவது கோரிக்கை :
பொருள் : பட்டுக்கோட்டை தாலுகா அதிராம்பட்டினத்திலிருந்து – மன்னார் குடிக்கும் மன்னார்குடி வழியாக கும்பகோணம் – திருவாரூர் ஆகிய ஊர்களுக்கு அரசு பேருந்து வசதி செய்து தரக்கோருதல் தொடர்பாக.
ஐயா,
கடற்கரைப்பட்டினங்களில் ஒன்றாகிய அதிராம்பட்டினத்தில் ஏறக்குறைய அறுபதாயிரம் மக்கள் தொகையைக் கொண்டு வாழ்கின்ற ஒரு தேர்வு நிலை பேரூராட்சியாகும். அதிரை மற்றும் இப்பகுதியை சுற்றி வாசிக்கக்கூடிய மக்கள் மன்னார்குடிக்கும், மன்னார்குடி வழியாக கும்பகோணம், திருவாரூர், மயிலாடுதுறை போன்ற ஊர்களுக்குச் சென்றுவர போதிய பேருந்து வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.
புதிதாக தொடங்கப்பட்ட மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்குப் பயணம் செய்ய வேண்டிய அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் உரிய நேரத்தில் பேருந்தைப் பிடித்து மன்னார்குடி செல்லவும், அதேபோல் காலையில் சென்னையில் இருந்துவரும் அதிராம்பட்டினம் பயணிகள் மன்னார்குடியில் இருந்து உரிய நேரத்தில் பேருந்து வசதி இல்லை. ஆகவே மன்னார்குடிக்கும், மன்னார்குடி வழியாக கும்பகோணம், திருவாரூர், மயிலாடுதுறை போன்ற ஊர்களுக்கு சென்றுவர இருவழி அரசு போக்குவரத்தை ஏற்பாடு செய்து தரும்படி ஆவன செய்யும்மாறு தங்களை அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி !
மூன்றாவது கோரிக்கை :
பொருள் : அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து கடைத்தெரு, கீழத்தெரு, மேலத்தெரு வழியாக மகிழங்கோட்டை வரையிலான ஊராட்சி ஒன்றிய நெடுஞ்சாலையைப் புதுபித்தல் தொடர்பாக.
ஐயா,
எங்கள் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து கடைத்தெரு, கீழத்தெரு, மேலத்தெரு வழியாக மகிழங்கோட்டை வரை செல்லும் ஊராட்சி ஒன்றிய நெடுஞ்சாலை சுமார் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இந் நெடுஞ்சாலை இடையில் புதுப்பிக்கப்படாததால் மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக ஆங்காங்கே காட்சியளிக்கின்றன. இச்சாலையில் நடந்து செல்பவர்கள் இடறி விழக்கூடிய சூழ்நிலையும் வாகனங்களில் செல்வோர் மிகவும் கஷ்டப்பட்டு பயணம் செய்யக்கூடிய சூழ்நிலையும் உள்ளது. இச்சாலையில் பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவியர் உள்ளனர். வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள், வழிபாட்டுத்தளங்கள் ஆகியவையும் உள்ளன. மினி பஸ், கல்லூரி பேருந்து போன்ற போக்குவரத்தும் உள்ளது. ஆகவே மிக அதிகமான மக்கள் பயன்படுத்தும் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்ட இச்சாலையை போதிய நிதி ஒதிக்கீடு செய்து விரைவில் புதிதாக தார்ச்சாலை அமைத்து தருமாறு தங்களை அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி !
நிகழ்ச்சிகள் துவாவுடன் இனிதே நிறைவுற்றது.
இப்படிக்கு,
தகவல் தொடர்பாளர்
AAMF - அதிரை
செய்தி அறியத்தந்த அதிரை நியூஸ்க்கு நன்றி.
ReplyDeleteஅனைத்து முஹல்லாவின் இந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் நிறைவேறினால் நமதூர் பல வகையிலும் முன்னேற்றம் அடைய வழிவகுப்பதாக இருக்கும்.
செய்தி அறியத்தந்த அதிரை நியூஸ்க்கு நன்றி
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.