.

Pages

Monday, February 4, 2013

அதிரை பேருந்து நிலைய கட்டுமானப் பணிக்கு ரூ 38 லட்சம் ஒதுக்கீடு !


அதிரை மற்றும் அதிரையைச் சுற்றி வசிக்கக்கூடிய பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகிய புதிய பேருந்து நிலையம் அமைத்திட வலியுறுத்தி நமதூரைச் சார்ந்த சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் இது தொடர்பான கோரிக்கையை சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

கடந்த ஆண்டு நமதூருக்கு வருகை புரிந்த மத்திய இணை அமைச்சர் திரு. S.S. பழனிமாணிக்கம் அவர்களிடம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட இன்னபிற முக்கிய கோரிக்கையுடன் நமது நேர்காணலில் அதிரை பொதுமக்களின் விருப்பத்தை அவரிடம் நேரடியாக தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் அவர்களும் அதற்குரிய ஏற்பாடுகளை செய்வதாகக் கூறிச்சென்றார்.

[ அவருடன் கூடிய நேர்காணலை பார்க்க... இங்கே கிளிக் செய்க ]

வருகிற நிதியாண்டில் தனது தொகுதிக்கு கிடைக்கக்கூடிய மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய பேருந்து நிலையம் அதிரையில் அமைப்பதற்காக ரூபாய் 38 இலட்சத்தை ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்காக நேற்று [ 03-02-2013 ] அதிரை பேருந்து நிலையம் அருகே நகர தி.மு.கழகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் திரு. S.S. பழனிமாணிக்கம் அவர்களுக்கு பாராட்டுதல் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கு நன்றி.
    கனவுகள் நனவாகும்.
    இதற்காக அரும்பாடுபட்ட அத்தனை இயக்கத்தார்களுக்கும் சம்பந்தப்பட்ட மந்திரிகள், அதிகாரிகள் அனைவருக்கும் நன்றிகளோடு பாராட்டுக்களும்.

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. அதிரை மக்களின் நீண்ட நாள் கனவை நினைவாக்கித்தந்த இதன் முயற்ச்சியில் ஈடுபட்டு காரணமாக இருந்து களமிறங்கிய அனைவர்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நல்ல செய்தி சொன்னீங்க வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.