அதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டியின் முதல் ஆட்ட நிகழ்ச்சி நமதூர் காட்டுப்பள்ளி ESC மைதானத்தில் நேற்று இரவு 9.30 மணியளவில் சிறப்பாக துவங்கியது.
நேற்றைய முதல் ஆட்டத்தை அதிரை அனைத்து மஹல்லா நிர்வாகிகள், அதிரை காவல்துறை ஆய்வாளர் செங்கமலக்கண்ணன், கீழத்தெரு மஹல்லா அமீர கிளையின் துணைத்தலைவர் சிஹாப்தீன் மற்றும் அதிரை ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் சேக் அலாவுதீன்,அஜ்மல்கான், அமீர் பாட்சா, அமானுல்லா [ சேட்டு ] ஆகியோர் துவக்கி வைத்தனர்.
மின்னொளியில் இரவு ஆட்டமாக நடந்து போட்டிகளில் மொத்தம் 16 அணிகள் பங்கு பெற்று விளையாடினர். அதில் நான்காவது இடத்தை அதிரை Terry Wear அணியினரும், மூன்றாவது இடத்தை நிரவி அணியினரும் தக்க வைத்திருந்தனர்.
இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் கடலூர் அணியினரும், அதிரை ப்ரண்ட்ஸ் அணியினரும் விளையாடினர். இந்த ஆட்டத்தில் அதிரை ப்ரண்ட்ஸ் அணியினர் முதல் இடத்தைப் பெற்று கோப்பையை தட்டிச்சென்றனர்.
பரிசளிப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் செயலாளர் பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்கள் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசினை தட்டிச்சென்ற அதிரை ப்ரண்ட்ஸ் அணியினரை பாராட்டியதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு வெற்றிகோப்பையும், பரிசுத்தொகையும் வழங்கி கெளரவித்தார்.
இரண்டாம் பரிசை வெற்றிபெற்ற கடலூர் அணியினருக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட 'மனித உரிமைக்காவலர்' KMA. ஜமால் முஹம்மது அவர்கள் வழங்கி கெளரவித்தார்.
மூன்றாம் பரிசை வெற்றி பெற்ற நிரவி அணியினருக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட A. முஹம்மது உமர் அவர்கள் வழங்கி கெளரவித்தார்.
நான்காம் பரிசை வெற்றி பெற்ற அதிரை Terry Wear அணியினருக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட MMS. அப்துல் ரஹுப் அவர்கள் வழங்கி கெளரவித்தார்.
பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்களின் சிறப்புரையுடன் துவங்கிய இன்றைய நிகழ்ச்சியில் ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகை தந்து ரசித்தனர். நிகழ்ச்சிகுரிய அனைத்து ஏற்பாடுகளும் அதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக சிறப்பாக செய்யப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks to :
Organizer of ESC Team &
www.adiraiclassifieds.com
வெற்றி பெற்று அதிரைக்கு பெருமை சேர்த்த அதிரை ப்ரண்ட்ஸ் அணியினர்க்கும் இந்த ஆண்டு விளையாட்டை சிறப்பித்த அனைத்து அணியினருக்கும் இவ்விளையாட்டை சிறப்புடனே நடத்தி நமது ஊருக்கு பெருமைசேர்க்கும்''அதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் '' நடத்துனர் அனைவர்களுக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteமிகவும் அருமையான ஆட்டம், நன்றாக ஆடினார்கள், அந்த இரவு நேர வேலையில் அதுவும் பனத்துளிகளின் நடுவில் ஆட்டத்தைக் காணும்போது அதை எப்படி சொல்வதென்றே தெரியவில்லை.
போட்டியில் பங்குபெற்ற அனைத்து கைப் பந்தாட்ட வீரர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
வெற்றி பெற்ற அதிரை ப்ரண்ட்ஸ் அணிக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.
ReplyDelete