.

Pages

Thursday, February 14, 2013

பொதுத்தேர்வு வினா வங்கி வெளியீடு !

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு அரசு பொதுத் தேர்வில் எளிமையான முறையில் தேர்ச்சி பெறவும், அதிக மதிப்பெண்கள் பெறவும் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் வினா வங்கி ஏடுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான உரிய தொகையை கொடுத்து தஞ்சை, கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலகங்களில் மாணவ, மாணவிகள் இந்த வினா வங்கி ஏடுகளைப்பெற்று பயன்பெறலாம்.

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும், மாநில பெற்றோர்- ஆசிரியர் கழகம், பொதுத் தேர்வு எழுதும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்காக வினா வங்கி புத்தகங்களை தயாரித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறது. 

பாடப் புத்தகங்களை தயாரித்த ஆசிரியர் குழுவினரே வினா வங்கி புத்தகங்களையும் தயாரித்து வழங்குவதால், பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவ மாணவியருக்கு இந்த புத்தகம் சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது.

3 comments:

  1. பயனுள்ள பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி.

    /// பாடப் புத்தகங்களை தயாரித்த ஆசிரியர் குழுவினரே வினா வங்கி புத்தகங்களையும் தயாரித்து வழங்குவதால், பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவ மாணவியருக்கு இந்த புத்தகம் சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது. ///

    ReplyDelete
  2. எங்கு விற்பனை செய்யப்படுகின்றன என்பதை உடன் எழுதினால் நலம்.

    ReplyDelete
  3. அருமையான பதிவு வாழ்த்துக்கள். அதிரை நியூஸ்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.