.

Pages

Tuesday, February 12, 2013

குடும்ப அட்டைகளை புதுப்பித்துக்கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு !

தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளின் புழங்கும் காலத்தை 1–1–2013 முதல் 31–12–2013 வரை மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டித்து அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. அதன்படி குடும்ப அட்டைகளை புதுப்பிக்கும் பணி அனைத்து நியாய விலைக்கடைகளிலும் 1–1–2013 முதல் தொடங்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது.

குடும்ப அட்டைகளை புதுப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 27–ந்தேதி ஆகும். இந்த பணிக்காக நியாய விலைக்கடைகளுக்கு 17–2–2013 மற்றும் 24–2–2013 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகள் வேலை நாட்கள் ஆகும். ஆதலால் குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குரிய நியாய விலைக்கடைகளுக்கு சென்று குடும்ப அட்டைகளை 2013–ம் ஆண்டிற்கு உடனடியாக புதுப்பித்துக்கொண்டு கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்த்திடுமாறு நம்மை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அன்புடன் கேட்டுக்கொள்கிறார்.

3 comments:

  1. பதிவுக்கு நன்றி்.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி்.

    அத்தியாவசிய தேவைகளை காலம் தாழ்த்தாமல் செய்துகொள்வது நலம்.

    ReplyDelete
  3. முக்கியமான தகவல் பதிவுக்கு நன்றி அதிரை நியூஸ்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.