
வ அலைக்கும் சலாம் சலீம். நீங்க எப்படி இருக்கீங்க. நா இப்போ கடக்கி போறதில்ல அது நமக்கு சரியா வரலே. ஏதாவது நம்ம ஊர்லே தொழில் பண்ணலாம்ன்டு நெனச்சிக்கிட்டு இருக்கேன்.
நல்ல விஷயம் தானே சாதிக்கு. நம்ம ஊரும் கொஞ்சம் கொஞ்சமாவது முன்னேறட்டும். இப்பொ கூட ஹபீபா ஹைப்பர் மார்கெட்டுண்டு நம்ம துபைல இருக்குற மாதிரி ஒரே இடத்துலேயே எல்லா சாமான்களும் கெடக்கிற மாதிரி பெரிய லெவல்ல ஓப்பன் பண்ணி இருக்காங்க. இப்புடி நம்ம ஊர்ல கெடக்காத சாமான்களா பாத்து பிஸ்னஸ் ஆரம்பிச்சா வெளியூருக்கு ஏன் ஜனங்க போறாங்க..?
நல்ல யோசனை தான் சலீம். நம்ம ஊர்ல கெடக்காத சாமான் என்னண்டு பாத்து அந்த பிஸ்னச நம்ம ஆரம்பிச்சிட வேண்டியதுதான். யோசனை பண்ணிக்கிட்டு அப்புறமா நான் சொல்றேன். இத்தன வருசமா சௌதியிலெ இருந்து நம்ம காலத்தெ வேஸ்ட் பண்ணிபுட்டோமேண்டு தான் வருத்தமா இருக்கு.
அதெ இப்போ நெனச்சி என்னா பண்றது சாதிக். இனி ஆக வேண்டியத பாருங்க. உள்ளூர்ல வியாபாரம் பண்ணா அதுலெ ஒரு பரக்கத்து இருக்கு. அந்தக்காலத்துலெ நம்ம மூதாதையர்கள் எல்லாம் உள்ளூர்லெ வியாபாரம் பண்ணி சம்பாரிச்சி ஊடு கட்டலையா..? சொத்து வாங்கலையா..? கொமர கர சேக்கலையா..? குடும்பத்த ஓடலையா..? எதையும் முறையா செஞ்சா நட்டப்படாமே நல்லா லாபம் கெடக்கும். நம்மட சொந்த உழைப்பும் வேணும். நம்ம தான் முதலாளிண்டு ஒரு எடத்துலேயே உக்காந்து இருந்தா என்ன தான் யாபாரம் நடந்தாலும் வேற வழியா போய்டும். நீங்க இந்த அளவுக்கு என்னோட பலவுனத்துனாலே தான் உங்களுக்கு யாபாரத்த பத்தி எடுத்து சொன்னேன்.வேற எதுவும் தப்பா நெனச்சிக்கிடாதிங்க.
நா எதுக்கு தப்பா நெனக்கணும் சலீம். எல்லாம் என்னட நல்லதுக்கு தானே சொல்றீங்க. அதயும் உட்டுப்புட்டு இந்தக்காலத்துலே இப்புடியெல்லாம் உங்களை மாதிரி யாரு சொல்லிக்கொடுப்பா..? எல்லாம் நான் பாத்தவரக்கிம் சுயநல வாதிங்க தானே அதிகம் பேர் இருக்காங்க.உங்க மாதிரி பொது நல வாதியே எங்கே பாக்க முடியிது.
நீங்க இப்புடி சொன்னது நாளே தான் எனக்கும் ஒரு செய்தி ஞாபகத்துலெ வருது சலீம். என்னாண்டா இந்த சாராயக்கடை நம்ம ஊர்லே ஒன்னு ரெண்டா ஆனிச்சி. ரெண்டு மூனா ஆனிச்சி. இப்போ மூணு நான்கு என்று பெருத்துக்கேட்டே போய்க்கிட்டு இருக்கு. இத யாரும் தடுக்குறத்துக்கு ஆளில்லை. நெனக்க நெனக்க ஆத்திரமா வருது. நம்ம ஊர்ல அந்த அமைப்பு இந்த அமைப்புண்டு ஆயிரத்தெட்டு அமைப்பு இருக்கு. இருந்து என்ன புண்ணியம்..? ஒரு பிரச்சனைண்டா மட்டும் ஒன்னு கூடுறாங்க. இதுக்கு ஒன்னு கூடி தடுக்க ஏன் பயப்புடுராங்கண்டு தெரியல.
இது அரசியல் வாதிகளோட சப்போட்ல நடத்த உரிமை வாங்கிகிட்டு நடத்துனாலும் நடத்து வாங்க சாதிக். அதான் யாரும் எதுவும் கேட்காம ஓடிக்கிட்டு இருக்கு போல. இருந்தாலும் நம்ம ஊர் மக்கள் ஒன்னு கூடி அந்த சராயக்கடைனாலே என்ன பாதிப்பு இருக்குங்கிறத விவரமா எழுதி ஊர் மக்கள் எல்லாரும் கையெழுத்து போட்டு காவல் துறைக்கோ, இல்லாட்டி அது சம்மந்த பட்ட துறைக்கோ மனு கொடுத்தால் ஒரு சமயம் எடுத்துடுவாங்க. நமக்கு ஏன் வம்புண்டு நெனச்சி எல்லாரும் ஒதுங்கி போறத்துனால தான் துணிச்சலா ஒன்னு ஒன்னா நம்ம ஊர்ல அமைதியா எல்லா அனாச்சாரமும் நடந்துகிட்டு இருக்கு. நம்ம மட்டும் பேசி புண்ணியம் இல்லெ...!
அப்பறம் நம்ம ஊரு காட்டுப்பள்ளி மைதானத்துலெ மின்னொளி கைப்பந்து போட்டி நடத்து நாங்களே நீங்க வந்து பாத்தீங்களா சலீம்..? உங்களை ஆளையே காணமே வந்த மாதிரி தெரியலையே அதான் கேட்டேன்.
நா போக முடியலே சாதிக். ஒடம்பு நலுதா இருந்ததாலே இந்த பனியிலே நிண்டா சரிவராதுண்டு இருந்துட்டேன். இப்போ நம்ம ஊட்டுலெ ஒரு கம்பியூட்டர் இருந்தா போதும் உக்காந்த இடத்திலேயே ஊர் செய்தியே பாத்துக்கிடலாம்ன்னு இருந்துட்டேன். அப்பறம் நம்ம ஊரு அதிரை பிரண்ட்ஸ் அணி தான் ஜெய்ச்சி கப்பு வாங்கி இருக்காங்க. நம்மூறு ஜெய்ச்சத படிச்ச ஒடனே மனசுக்கு கொஞ்சம் சந்தோசமா இருந்திச்சி. நாம பெருமை படக்கூடிய விஷயம் தானே..!
நம்ம காலம் மாதிரி இல்லே சலீம்.. நம்ம ஊர்லே இப்போ உள்ள இளைஞ்சர்கள் விளையாட்டுலே நல்ல ஆர்வமாக இருக்காங்க. இனி வர்ற காலத்துலே நம்ம ஊருக்கும் பல விளையாட்டு வீரருவோ இந்தியா அளவுலே போய் விளையாடத்தான் போறாங்க பாருங்களேன்
அப்படி விளையாண்டா அது நம்ம ஊருக்கு பெருமை தானே சாதிக்..
சரி மணி பதினொன்னு ஆய்டிச்சி. உங்களோட பேசிக்கிட்டு இருந்ததாலே நேரம் போனதே தெரியல. வூட்டுலே ராலு வாங்கிட்டு வரச்சொன்னாங்க. நாம் போய் வாங்கி கொடுத்துட்டு வந்துட்றேன்.அப்பறமா பாக்கலாம்.
அதிரை.மெய்சா
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.