.

Pages

Sunday, February 10, 2013

வழி விடுங்க... வழி விடுங்க... ஆம்புலன்ஸ்சுக்கு !

ஓங்கி ஒலி எழுப்பிக்கொண்டு விரைவாக சென்றுகொண்டிருக்கும் ஒரு ஆம்புலன்சை எங்கேயாவது நாம் பார்த்தவுடன் முதலில் நம் மனதில் ஒரு வித அனுதாபம் ஏற்பட்டு பிறகு கடந்து செல்கின்ற அந்த வாகனத்திற்கு வழி விடுங்க... வழி விடுங்க... என சொல்கின்ற அளவுக்கு மனித நேயம் நம் அனைவரிடத்திலும் வளர்ந்து காணப்படும்.

இதற்கான காரணம் இல்லாமல் இல்லை மனித வாழ்வில் இதன் பயன்பாடு எண்ணிலடங்கா ஒருவருக்கு ஏற்படும் விபத்தாகட்டும், அவசர சிகிசையாகட்டும், இறப்புகள், பிரசவம் போன்ற மனித வாழ்வாதார சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு முக்கிய பங்களிப்பது ஆம்புலன்ஸ் என்பது நாம் மறுக்க இயலாது. எப்போது, எங்கே, யாருக்கு இதன் தேவை என்பதையும் யாராலும் கணிக்க முடியாவிட்டாலும் இதன் தேவையை எனக்கு தேவையில்லை என்று ஒதுக்கித் தள்ளவும் முடியாது. அவசர காலத்தில் இந்த வாகனத்தை பயன்படுத்தியோரிடம் கேட்டால் இதன் அருமை நமக்கு தெள்ளத்தெளிவாக உணர முடியும்.

நம் அலைபேசியில் சேமித்து பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு எண் என்றால் அது அவசர காலக் கட்டங்களில் நமக்கு விரைவாக உதவ முன் வரும் ஆம்புலன்ஸ்ஸின் தொடர்பு எண்கள் மட்டுமே என்றால் மிகையல்ல.

ஒரு விவசாயி தன் வயலில் உள்ள நெல்பயிருக்கு தண்ணீர் இறைத்து ஊற்றுகிறான். அவ்வாறு இறைத்த நீர் வாய்க்கால் வழியே ஓடி நெற்பயிர் உள்ள வயலை சென்றடைகிறது. அங்கே வாய்க்காலில் முளைத்திருக்கும் புல்லுக்கும் அந்த நீர் பயன்படும். அதுபோல சமூகத்தில் நன்மக்கள் செய்கின்ற இது போன்ற சில சேவைகள் பலருக்கு அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் பயனை கொடுக்கும் என்பது நிதர்சனமான உண்மை !

எண்ணிக்கையை உயர்த்தி இயற்கை சீற்றத்திலிருந்து அவற்றை பாதுகாப்போம் என்றென்றும்...

வாழ்க ஆம்புலன்ஸ் ! வளர்க ஆம்புலன்ஸ்ஸின் சேவைகள் !

சேக்கனா M. நிஜாம்

3 comments:

  1. எவ்வளவு கோடீஸ்வரனாக இருந்தாலும் தனக்காக ஓர் ஆம்புளன்ஸ் வைத்துக் கொள்வது இல்லை ஏழை பணக்காரன் பாகுபாடு இல்லாது ஏறிடும் நல்ல உதவி வாகனம் ஆம்புளன்ஸ் சேவையை ஆதரிப்போம்

    ReplyDelete
  2. ஆம்புலன்சை பற்றிய விளக்கம் அருமை.

    அறியத்தந்தமைக்கு நன்றி.

    அவசியம் அனைவர்களும் தெரிந்து கொள்ளவேண்டியவை.

    எல்லோர்க்கும் எந்நேரத்திலும் பயன் படக்கூடியவை ஆம்புலன்ஸ்.

    ஆகவே இன்று முதல் ஆம்புலன்ஸ் அலைபேசி என்னும் எல்லோரிடமும் பதிந்து இருக்கட்டும்...!



    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி

    ஆம்புலன்ஸ், இதை கண்டுபிடித்தவருக்கு முதலில் என் நன்றி கலந்த வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இரண்டாவதாக இந்த வாகனத்தை அவசரகால தேவைகளுக்காக இந்த இடத்தில் நிறுத்தி, இக்கட்டான சூழலில் சிக்குண்டவர்கள் யாராக இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ளும் வசதியினை கொடுத்த இயக்கத்திற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.

    ஆக மொத்தத்தில் எதுவாக யாராக என்னவாக இருந்தாலும் நாம் கவனிக்கப் படவேண்டியது பொதுசேவையையே. அந்த வகையில் பார்க்கும்போது இதுவும் ஒரு வகையில் மறுக்க முடியாத மகத்தான சேவையே.

    சேவைகள் தொடரட்டும்.

    சிந்திப்போம், செயல்படுவோம், வெற்றியடைவோம், சந்தோஷப்படுவோம், எதிர்காலத்தை வளமுள்ளதாக்குவோம்.

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.