.

Pages

Friday, February 22, 2013

குழந்தை வளர்ப்பு எவ்வாறு இருக்க வேண்டும் ?


குழந்தை வளர்ப்பு என்பது உண்மையில் ஒரு தனிக்கலை. கல்லூரிகளில் பாடமாக வைக்கும் அளவிற்கு நிறைய விசயங்களை உள்ளடக்கியது. குழந்தை பிறந்ததில் இருந்து அது நன்றாகப் பேசத் தொடங்கும் வரை, ஒவ்வொரு தாயும் தன் குழந்தை மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். அதில் உள்ள சிரமங்களை குழந்தை பெற்று, வளர்ப்பவர்கள் மட்டுமே அறிவார்கள். அதுவும் புதிய தாய்மார்கள் படும் சிரமம் ஏராளம். என்ன ஆயிற்று, ஏன் இப்படி, என்ன செய்யலாம் என்று விடை தெரியாமல் தடுமாறும் சந்தர்ப்பங்கள் நிறையவே வரும். பெரியவர்களை துணைக்கு வைத்திருப்பவர்கள் கொஞ்சம் தைரியமாக இருப்பார்கள்.

தனியே வெளிநாடுகளில் இருக்கும் தாய்மார்களுக்கு சிரமங்கள் அதிகம். ஒவ்வொன்றிற்கும் மருத்துவரிடம் ஓட வேண்டிய சூழல் வரும். சில அடிப்படை விசயங்களில் நாம் அதிகம் கவனம் செலுத்தினால், டாக்டரிடம் தொடர்ந்து செல்ல வேண்டிய நிலையை குறைக்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் தனிக்குடித்தனம் என்பது அதிகமாகிவிட்டது. வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் வேலை என்று இருப்பதால், இது தவிர்க்க இயலாததும் ஆகிவிட்டது. பெரியவர்கள் துணை மற்றும் ஆலோசனை இல்லாத காரணத்தால் நிறைய தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பில் நிறைய சந்தேகங்கள் தோன்றும். பெரும்பாலான இளம் தாய்மார்கள் வருந்துவதும், குழம்புவதும் குழந்தையின் உணவு விசயத்தில் தான். எந்தக் காலக்கட்டத்தில் என்ன உணவு கொடுப்பது என்பது அனுபவசாலியான தாய்மார்களுக்குக்கூட தடுமாற்றம் தரும் விசயமாக இருக்கிறது.

என்னதான் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினாலும், சில நேரங்களில் மருத்துவர்கள் பரிந்துரைப்பது மட்டும் போதுமானதாக இருப்பதில்லை மாறாக பெரியவர்களிடம்  ஆலோசனை கேட்டால் மற்றும் துணையுடன் மட்டுமே குழந்தைகளை வளர்க்க முடியும்.

பரிந்துரை : மான் A.ஷேக் [ கனடா ]
நன்றி : தளிகா 

3 comments:

  1. நல்லதொரு பயன்தரும் தகவல் !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    இந்தக் காலக் கட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஆண் துணை அவசியம் வேண்டும், இது இல்லாது காரணத்தினால் குழந்தைகள் முதல் பல பிரச்சனைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது, இதை யாராரும் மறுக்க முடியாது.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. அனைவரும் அறிய வேண்டிய பதிவு.

    அறியத்தந்தமைக்கு நன்றி.

    குழந்தை வளர்ப்பில் உள்ள கஷ்டம், சிரமம் அக்குழந்தையை பெற்றெடுத்த தாயை அன்றி வேறு யாருக்கும் தெரியாது.

    ஆனால் அக்கஷ்டத்தை தாயானவள் வெளிக்காட்டிக் கொள்ளாததால் அதன் சிரமம் பிறருக்கு பெரிதாக தெரிவதில்லை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.