முத்துப்பேட்டை கடல் பகுதி ஆசியாவிலேயே காணாத ஒரு பகுதியாகும். இந்த பகுதியில் உள்ள லகூன் தீவுக்கு பெரிய வரலாறு உண்டு. இப்பகுதியில் அதிகளவில் கொடுவா, வெள்ளான், மடவா, இறால் போன்ற மீன் வகைகள் அதிகளவில் கிடைப்பதால், இப்பகுதி மீன்களுக்கு தனி மவுசு உண்டு.
முத்துப்பேட்டை சுற்றியுள்ள ஜாம்புவானோடை, செங்காங்காடு, முனாங்காடு, தில்லைவிளாகம், ஆசாத் நகர், பேட்டை பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன் பிடித்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். அவர்கள் மீன் பிடிக்க மோட்டார் படகுகளை பயன்படுத்தி வருகிறார்கள்.
ஒரு காலத்தில், பாய் மர படகுகள் மூலம் சென்று வரும் போது சுமார் 3 அல்லது 4 நாட்கள் ஆகும். தற்போது மோட்டார் படகு என்பதால் நள்ளிரவு போகும் மீனவர்கள் அதிகாலை வந்து விடுவதால் மீன் உயிருடன் மார்கெட்டில் கிடைக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மீனவர்களுக்கு துணையாக அவர்களின் குழந்தைகள் சிறுவர்கள் உதவி செய்யும் வேலையில் வலைகளை சீர்படுத்துவது, படகுகளை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை கவனிப்பது உண்டு. இது நாளடைவில் படகுகளை சிறுவர்களே இயக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். சில குறும்புக்கார சிறுவர்கள் தனது நண்பர்களுடன் படகுகளை இயக்கி கும்மாளம் அடிப்பதும், வேகமாக போட்டி போட்டு ஒட்டுவதும் இது வாடிக்கையாக மாறி விட்டது. இதனை காணும் சுற்றுலா பயணிகள் பெரும் அதிர்ச்சியில் பயணம் செய்யும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
மேலும், அலம் என்னும் கடல் முகத்துவாரத்துக்கு முன் உள்ள பகுதி சேறுபகுதி என்பதால் சிறுவர்களின் படகில் அடிக்கும் லூட்டியால் அந்த பகுதி சேறுகுளப்பாகி காட்சியளிப்பதால் மற்ற படகுகள் செல்ல இடையூறு ஏற்படுவதும், அப்படியே கவிழ்ந்தால் படகு சவாரி செய்யும் பயணிகள் சேற்றுக்குள் சிக்கி பலியாக வாய்ப்புகள் உள்ளன. இது குறித்து, சுற்றுலா வந்த ஆசிரியர் தங்கபாபு மற்றும் நண்பர்கள் கூறியதாவது, சிறுவர்கள் படகுகளை இயக்குவது ஆச்சரியமாக இருந்தாலும் இது அவர்களது உயிரை உலை வைக்கும் செயலாக உள்ளது, இதனை காணும் என்னை போன்ற சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி கலந்து பயணமாக உள்ளது. இதனை அரசு தடுக்க வேண்டும்.
என்றார். இப்படி சிறுவர்களின் சுட்டி குறும்பால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த செயலை அரசு தடுக்க முன் வருமா..? அல்லது எதையுமே விபத்துகள் சம்பவங்கள் நடந்த பிறகு தான் யோசிக்கும் அரசு இதிலும் அப்படி தான் நடந்து கொள்ளுமா..? என கூறிகிறார்கள் அப்பகுதி மக்கள்.
நன்றி : ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை
[ முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் ]
Photos Credit : Google
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅருமையான தகவல்கள், நானும் பல வருடங்களாக கேள்விப்பட்டதோடு சரி, ஒரு தடவையாவது போகலாம் என்று நினைத்தாலும் சந்தர்பம் கிடைப்பது இல்லை, இனி ஒரு சந்தர்பம் கிடைத்தால் அதை தவறவிடுவதில்லை.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
இந்த தீவுக்கதை பற்றி பதிவில் அறியத்தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteசிறுவர்களை வைத்து படகு இயக்க வைப்பதை அனுமைதிக்கக்கூடாது.
இந்த தீவுக்கு சில விதி முறைகளை ஏற்ப்படுத்த சம்மந்தப்பட்ட அரசுத்துறைகளுக்கு அறியப்படுத்த வேண்டும்.
நான் சென்று இருக்கின்றேன் இந்த லகூன் பகுதிக்கு இது ஒரு படந்த காடு அதன் உள்ளே என்ன நடந்தாலும் யார்க்கும் சீக்கரம் தெரிய வாய்ப்பில்லை அங்கு செல்ல வேண்டும் என்றால் ஒரு அரசு அதிகாரி இருப்பார் அவரிடம் ரூபாய் ஐப்பது செலுத்தினால் அனுமதி சீட்டு வழங்குவார். அவர்கூட சிறுவர்கள் படகை இயக்கினால் அனுமதி வழங்காமல் இருந்தால் விபத்தில் இருந்து பாதுக்காக்கலாம். இந்த லகூன் பகுதியில் ஒரு திரைப்படம் எடுத்து உள்ளார்கள் குறிபிடக்தக்கது அந்த படம் பெயர் (பேராண்மை).
ReplyDelete