.

Pages

Tuesday, February 5, 2013

அதிரையில் கேபிள் இணைப்புகள் குறித்த கணக்கெடுப்பு தீவிரம் !

அரசு, கேபிள், டிவி நிறுவனம் துவங்கியதையடுத்து, பொதுமக்களுக்கு, 70 ரூபாய் மாத கட்டணத்தில், இணைப்பு வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. கேபிள் ஆபரேட்டர்கள், ஒரு இணைப்பிற்கு, 20ரூபாய், அரசுக்கு செலுத்த வேண்டும். மீதமுள்ள, 50 ரூபாய், நிர்வாகச் செலவு மற்றும் லாபத் தொகையாக வைத்துக் கொள்ளலாம் என அரசு அறிவித்தது.

கேபிள் ஆபரேட்டர்கள், அரசு அறிவித்த தொகைக்கு அதிகமாக, ஒரு இணைப்பிற்கு, 100 ரூபாய் பெற்று வருகின்றனர். இதை, கேபிள், டிவி நிர்வாகத்தால், கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும், தங்களிடம் உள்ள இணைப்புக்களை கணக்கில் காட்டாமல், குறைந்த எண்ணிக்கையிலான இணைப்புக்களே, தங்களிடம் உள்ளதாக கூறி, அரசு கேபிள், டிவி நிர்வாகத்திற்கு, இழப்பு ஏற்படும் வகையில், மாத தொகையை குறைவாகவே செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஒவ்வொரு ஆபரேட்டரிடமும் உள்ள இணைப்புக்களை முழுமையாக கணக்கெடுத்து வசூலித்தால், அரசுக்கு இழப்பு தவிர்க்கப்பட்டு கூடுதல் வருவாய் கிடைக்கும் என கருதப்பட்டது.
கேபிள் டிவி இணைப்பு குறித்து கணக்கெடுக்கும்படி ரேஷன் ஊழியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் லிமிடெட் மூலம் இதற்கான படிவம் அச்சடிக்கப்பட்டுள்ளது. கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களிடம், படிவத்தை கொடுத்து தேவையான விவரங்களை பூர்த்தி செய்து பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த படிவத்தில், குடும்ப தலைவரின் பெயர், முகவரி, கேபிள் இணைப்பு உள்ளது என்றால் அந்த ஆபரேட்டரின் பெயர் மற்றும் முகவரி, டிடிஎச் இணைப்பு உள்ளதா, மாதாந்திர கேபிள் கட்டணம் எவ்வளவு? எத்தனை சேனல்கள் தெரிகிறது ? சேனல்கள் தெளிவாக தெரிகிறதா என்பது போன்ற விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. 

கேபிள் டிவி இணைப்பு குறித்து கணக்கெடுத்து படிவத்தை விரைவில் ஒப்படைக்கும்படி, ரேஷன் ஊழியர்களுக்கு வட்ட வழங்கல் அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

3 comments:

  1. பயனுள்ள செய்தி.

    அறியத்தந்தமைக்கு நன்றி.

    எங்களைப்போல் தாயகத்தை விட்டு வெகு தூரத்தில் இருப்பவர்களுக்கு ஊர் செய்தியை உடனுக்குடன் பதிந்து ஊரில் இருக்கும் உணர்வை ஏற்ப்படுத்தி வரும் அதிரை நியூஸ்சிற்கு
    நெஞ்சம் நிறைந்த நன்றியும் வாழ்த்துக்களும்..!

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி்.

    பயனுள்ள தகவல்.
    இதிலும் முறைகேடுகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளனும்.

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. இந்த படிவத்தை யார் யார் வீட்டில் கேபிள் டிவி இணைப்பு உள்ளது என்று பார்த்து வீடுவீடாக கொடுத்தால் இன்னும் நல்லது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.