.

Pages

Saturday, February 16, 2013

அமீரக அதிரை கீழத்தெரு முஹல்லா மாதாந்திர கூட்டம்.!

 
அமீரக அதிரை கீழத்தெரு முஹல்லா மாதாந்திர கூட்டம். துபாயில் 15 / 02 / 2013 வெள்ளிக்கிழமை அன்று அமீரக கீழத்தெரு முஹல்லா தலைவர் அப்துல் ஜலீல் அவர்கள் முன்னிலையில் அப்பாஸ் ரூம் மாடி வளாக    த்தில் சகோதரர் மீரா மொய்தீன்  கஹ்ராத் ஓத இனிதே ஆரம்பமானது.








கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :   
                                                          .
1, மார்க்கக்கல்வி கற்றுக்கொடுக்க நியமித்த இரண்டு இடங்களில் பிள்ளைகள் கூடுதலாக பயில வருவதால் இட வசதி இன்மையின் காரணத்தால் வேறு மூன்றாம் இடம் காலியார்  தெருவிலோ   புதுக்குடியிலோ விரைவில் துவங்க ஏற்பாடு செய்யப்படும். இன்ஷா அல்லாஹ் நான்காவது பள்ளியும் நமது தெருவில் தொடங்கப்படும். அத்துடன் வருட இறுதியில் சிறப்பாக மார்க்க கல்வி பயின்ற பிள்ளைகளுக்கு பள்ளியின் முதலாம் ஆண்டு [first annual day ] அனுசரித்து குரான் போட்டி நடத்தி பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்படுவது    பற்றியும் . பேசப்பட்டன.


2, கீழத்தெரு முஹல்லா காட்டுப்பள்ளி அருகில் கட்டி முடித்தும் திறக்கப்படாத நிலையில் உள்ள சுகாதார வளாகம் (கழிப்பறை கட்டிடம்) திறப்பது பற்றி பேரூராட்சித்தலைவர் ஜனாப்  அஸ்லம் அவர்களிடம் மீண்டும் முறையிட்டு வலியுறுத்தப்படும்.


3,அமீரக அதிரை கீழத்தெரு உதவிப்பொருளாலராக சகோதரர் முகைதீன் அப்துல் காதிர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  இனி மாதாந்திர சந்தா வசூல் அவர்களுடைய பொறுப்பாய் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதன்படி  சந்தா வசூலிக்க சகோதரர் தஸ்தகீர் நியமிக்கப்பட்டுள்ளார். பணத்தை  மாதமாகவோ அல்லது 3, 6 மாதம் என மொத்தமாகவோ கொடுப்பதானாலும் கொடுத்துக்கொள்ளலாம் என்பதாக தெரிவிக்கப்பட்டன.

 
4, நமதூர் M.S.M நகரைச்சார்ந்த S.A.அப்துல் மஜீது அவர்களுடைய பேத்தி ஆப்ரினுக்கு இதய அறுவை சிகிச்சைக்கு வேண்டி மருத்துவ உதவி. வசூலித்து வழங்க கலந்துரையாடி . அதன்படி கூட்டத்திலேயே வசூலிக்கப்பட்டன. விரைவில் அமீரக அதிரை கீழத்தெரு முஹல்லா சார்பாக பயனாளிக்கு வழங்கப்படும்.


5,அமீரகத்திற்கு வேலைதேடி வரும் நமது தெரு முஹல்லாவாசிகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக்கொடுக்க அதிக பட்சம் முயற்ச்சி எடுக்கப்படும். என்பதாகவும் தீர்மானிக்கப்பட்டன. தொடர்பு கொள்ள வேண்டிய மின்அஞ்சல்   முகவரி.adiraieast@gmail.com


கூட்ட முடிவில் சகோதரர் மீரா மொய்தீன்  கஹ்ராத் ஓத கூட்டம் இனிதே முடிவுற்றன.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்கள் பரிமாறிக்கொண்டு சிறப்பித்து தந்த கீழத்தெரு முஹல்லாவாசிகள் அனைவர்களுக்கும் அமீரக அதிரை கீழத்தெரு முஹல்லா அவையின் சார்பாக நன்றியினை தெரியப்படுத்தி கொள்கிறேன்.


இங்ஙனம்,
M.அப்துல் ஜலீல்
தலைவர் - அமீரக அதிரை கீழத்தெரு முஹல்லா

தொகுப்பு : அதிரை.மெய்சா
 
நன்றி : அதிரை ஈஸ்ட்

4 comments:

  1. அஸ்ஸலாமு அழைக்கும் முதலில் இந்த கூட்டத்தில் கலைந்துக்கொண்ட மஹல்லா வாசிகள் அனைவர்க்கும் எனது சலாத்தை தெரிய படுத்துக்கிறேன்.இதில் எடுக்கப்பட்ட தீர்மானக்கள் அனைத்தும் அருமை புகைப்படகள் எல்லாம் அருமை.வாழ்த்துக்கள் பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

    ///\\\5,அமீரகத்திற்கு வேலைதேடி வரும் நமது தெரு முஹல்லாவாசிகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக்கொடுக்க அதிக பட்சம் முயற்ச்சி எடுக்கப்படும். என்பதாகவும் தீர்மானிக்கப்பட்டன. தொடர்பு கொள்ள வேண்டிய மின்அஞ்சல் முகவரி.adiraieast@gmail.com///\\\

    வேலை தேடி வருபவர்கள் யாராக இருந்தாலும் பாகுபாடுகள் இல்லாமல் முடிந்த அளவு உதவிகள் செய்வதே நல்லது.

    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. இன்ஷா அல்லாஹு நம் சமுதாய மக்கள் அனைவர்க்கும் முயற்ச்சி செய்வோம் வேலை கிடைப்பதற்க்கு.ஜமால் காக்கா சொன்னதுப்போல்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.