.

Pages

Monday, February 11, 2013

சென்னை – கன்னியாகுமரி விழிப்புணர்வு சைக்கிள் பேரணியினருக்கு அதிரையில் வரவேற்பு !


கடலோர மீனவர்களுக்கு உதவி செய்ய ‘1093’ என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைக்கலாம் என வலியுறுத்தி சென்னை முதல் கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மேற்கொண்டுள்ள கடலோர பாதுகாப்புபடை ஏடிஜிபி சைலேந்திரபாபு தலைமையிலான குழுவினர் நேற்று அதிரைக்கு வந்தனர்.

கடலோர பாதுகாப்பு குழும ஏடிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் 30 கடலோர பாதுகாப்பு போலீசாரும், 10 கடலோர காவல்படையினரும் இணைந்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி சென்னையில் கடந்த 6ம் தேதி துவங்கியது. கோவலம், கல்பாக்கம், மரக்கானம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், நாகை வழியாக நேற்று அதிரையில் உள்ள கடலோர காவல் நிலையத்திற்கு வருகை தந்தனர். தஞ்சை மாவட்ட எஸ்பி அன்பு தலைமையில் விழிப்புணர்வு பேரணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து ஏடிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் கூறுகையில்...

சென்னை - கன்னியாகுமரி வரை 1076 கிமீ தூரம் கடற்கரை அமைந்துள்ளது. இதில் 591 மீனவ கிராமங்கள் உள்ளன. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும்போது இயற்கை இடர்பாடுகளால் விபத்துகள் நடந்து வருகிறது. இதில் சிலர் இறந்து விடுகின்றனர். கடந்த ஆண்டு 180 மீனவர்களை காப்பாற்றி உள்ளோம். 49 படகுகளை மீட்டு கொடுத்துள்ளோம். இதில் பெரும்பாலான மீனவர்களுக்கு அவசரக்கால இலவச தொலைபேசி எண் தெரியாமல் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். மீனவர்களுக்கு 1093 என்ற இலவச தொலைபேசி அழைத்தால் அதிநவீன படகுகள் மூலம் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவோம். அதிக தொலைவில் கடலில் சிக்கி கொண்டால் கடலோர காவல்படைக்கு நாங்கள் தகவல் கொடுத்து ரோந்து கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் காப்பாற்றுவோம். அதற்காக மீனவ பகுதிகளில் சைக்கிள் மூலம் சென்று இலவச 1093 எண்ணை தொடர்புகொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சைக்கிள் பேரணியை நடத்தி வருகிறோம்  என்றார்.

3 comments:

  1. செய்தி அறியத்தந்தமைக்கு நன்றி.

    விழிப்புணர்வை மக்களுக்கு பல ரீதியாக பரப்பிட வேண்டும்.

    இனி வரும் காலங்களில் அனைவர்களும் அனைத்து விசயங்களிலும் விழிப்புணர்வு பெற்றிடுவார்கள்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    செய்தி அறியத்தந்தமைக்கு நன்றி.

    விழிப்புணர்வை மக்களுக்கு பல ரீதியாக பரப்பிட வேண்டும்.

    இனி வரும் காலங்களில் அனைவர்களும் அனைத்து விசயங்களிலும் விழிப்புணர்வு பெற்றிடுவார்கள்.

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. விழிப்புணர்வை மக்களுக்கு இப்படியும் செய்ய முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.விழிபுணர்வுக்கு வாழ்த்துக்கள். இதில் கலந்துகொண்ட அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.