அஸ்ஸலாமு அலைக்கும் என்ன சாதிக். சௌக்கியமா இருக்கீங்களா..? ஆளையே பாக்க முடியல. அன்னக்கி ராலு வாங்கி கொடுத்துட்டு இந்தா வந்துரெண்டு சொல்லிப்புட்டு போன ஆளு திரும்பி வரவே இல்லே..!
வ அலைக்கும் சலாம் சலீம். நீங்க எப்புடி இருக்கீங்க. வருத்தப்படாதிங்க. அன்னக்கி ரேசன் கடைவரைக்கும் போய் இருந்தேன். நம்ம தமிழ் நாடு அரசு கேபிள் டி.வி தொடங்குறாங்கலாம் மாசம் எழுவது ரூபாதான் வருமாம். அதான் இந்த கேபிள் டி வி க்கி பாரம் எழுதிக்கொடுக்கனும்ன்டு வூட்டுல சொன்னாங்க அதான் போய் நின்டு எல்லா வெவரமும் எழுதிக்கொடுத்துட்டு வரும் போது லொகருக்கு பாங்கு சொல்லிட்டாங்க. தொழுதுட்டு அப்புடியே வூட்டுக்கு போயிட்டேன். வேற ஏதும் நெனச்சிக்கிடாதீங்க. சரி...நீங்க எழுதி கொடுத்துட்டீங்களா..?
இப்ப நீங்க சொல்லித்தான் எனக்கே இதப்பத்தி தெரியிது சாதிக். ஊர் செய்தியெல்லா உங்ககிட்ட கேட்டாத்தான் நம்மதெரிஞ்சிக்க முடியிது. அப்பறம் இதுக்கு நாம் போய் நிக்க முடியாது. எம்மொவனத்தான் அனுப்பி வைக்கணும். எப்படியோ இனிமே நமக்கு கேபிள் டி வி லைன்லே கொஞ்சம் காசு மிச்சப்ப்படும்ண்டு சொல்லுங்க..ஹி..ஹி..ஹி..
அப்பறம் இன்னொரு செய்தி பரவலா ஜனங்க பேசிக்கிட்றது காதுலே உலுந்திச்சி சலீம். என்னான்டா முக்கியமான இடங்கல்லைஎல்லாம் சுகாதார வளாகமுன்டு பொதுக்கழிப்பிடம் கட்டுனாங்கல்ல அது கட்டி முடிஞ்சி இவ்வளவு நாலு ஆயிம் இன்னமும் தொறக்காம இப்புடியே போட்டு வச்சிக்கிராங்களே .அதெ எப்போதான் தொறக்க போறாங்களாம் உங்களுக்கு எதுவும் தெரியுமா..?
ஆமா இப்போதான் எனக்கும் ஞாபகம் வருது சாதிக். வர்ற வழிலே அதப்பத்திதான் பேசிக்கிட்டு நின்டாங்க. என்னாண்டு தெரியல கட்டி போட்டுட்டு கண்டுக்காம் சும்மா இருக்காங்க. ஏதோ காரணத்துனாலேதான் இப்புடி இருக்காங்க இதே சீக்கிரமா தொறந்து வச்சிட்டான்கண்டா நல்லது. எத்தனையோ வூட்டுலே டாய்லட் வசதி இல்லாதவங்களுக்கு .இது ரொம்ப உதவியா இருக்கும்.
நீங்க சொல்றது சரிதான் சலீம். நம்ம ''அனைத்து முஹல்லா'' காரவங்களாவது பேரூராட்சியிலே போய் முரயிடலாம்ல.அதான் என்னாண்டு ஒன்னும் புரியல.
அப்பறம் சாதிக் செய்தி கேள்விப்பட்டிங்களா..? துபாயிலே இருக்கிற கீழத்தெரு முஹல்லா, மேலத்தெரு முஹல்லாவாசிகள் கூட்டம் போன வாரம் நடந்திச்சாம். என் தங்கச்சி மொவன் போன் பண்ணும்போது சொல்லிக்காட்டுனான். அவங்க அவங்க தெரு சார்பா நல்ல நல்ல திட்டமெல்லாம்.தீர்மானிச்சி பேசி இருக்காங்க. எல்லாம் நம்ம ஊரும் தெருவும் வளர்ச்சியடைய நல்லதுக்காகத்தான் பேசி இருக்காங்க.
அப்புடியா சலீம். நம்ம ஊரு புள்ளைங்க வெளிநாட்டுல பொழப்புக்காக போன எடத்துலேயும் ஆயிரத்தெட்டு பிரச்னைக்கு நடுவுலே நம்ம ஊரப்பத்தியும் தெருவப்பத்தியும் இந்த அளவுக்கு அக்கறையா ஒவ்வொரு காரியமும் செஞ்சிக்கிட்டு இருக்காங்களே உண்மையிலேயே பாராட்டனும் தெரியுமா..!
என்னத்த சென்ஜாலும் நம்ம வூரு காரவங்க ஏதாவது கொற சொல்லிக்கிட்டு தானே இருக்காங்க சாதிக். இப்புடி ஒவ்வொரு முஹல்லாவுளையும் நல்ல திட்டங்கள தீர்மானிச்சி நம்ம தெருவுலயும் ஊர்லயும் உள்ள கொறபாடுகள சரி சென்ஜாங்கண்டா இன்னும் நம்ம ஊரு முன்னேத்தமா போவும். அதுக்கு எல்லாரும் நாம ஒத்துமையா இருக்கணும்.
சொல்றவங்க எதையும் சொல்லிட்டு போகட்டும்ண்டு அத பெருசா எடுத்துக்கிடாம சமுதாயத்துக்கு நல்லது செய்யனும்ன்டு நெனக்கிறாங்களே அது பெரிய விசயம்தானே சலீம். இனி வருங்காலத்துலே எல்லாத்துக்கும் ஒன்றுபட்டு நிப்பாங்க. இப்போ எல்லா இளைய சமுதாயமும் நல்லா படிக்கிறாங்க. உலகவிசயத்துலே கவனமா இருக்கிறாங்க. அதெல்லாம் போக போக சரியாய்டும். நீங்க உங்க வயசுலே எவ்வளவு கலுசரத்தனம் பண்ணுனீங்க எல்லாரும் அப்புடித்தான்.
சரி அப்பறம் என்னா செய்தி சாதிக். நா பேத்திய கூட்டிக்கிட்டு உம்மா வூட்டுக்கு போவனும். நேரமாச்சி. உங்ககிட்ட ஊரு செய்தி பேசுனாலே நேரம் போறது தெரியாது. போயிட்டு வரட்டுமா. !
அதிரை மெய்சா
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteடீக்கடை சந்திப்புள்ளே, டீ வாங்கி குடிச்சே நேரம் போனது தெரியல்லே, கடைசியில் பார்த்தா டீக் கடையிலே டீயே இல்லையாம், சரி நாளை காலையில் வருவோம்.
ஆக்கம் அருமை.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
சூடா .செயதி..கிடைத்த திருப்தி
ReplyDeleteநல்ல எழுத்து நடை !
ReplyDeleteடீக்கடை சந்திப்பு அடிக்கடி நிகழட்டும்
நம்ம ஊரில் டீக்கடைகளில் காலை பொழுதில் நடக்க கூடிய செய்தி தான் இது அதையே கட்டுரையாக பதிந்து இருப்பது அருமை. எல்லோரும் ஓன்றுக்கூடினால் தான் நல்லது நடக்கும்.அதுப்போல்தான் கீழத்தெரு மஹல்லா மேலத்தெரு மஹல்லா எடுத்த தீர்மானக்கள்.
ReplyDelete