.

Pages

Sunday, February 24, 2013

அதிரை காதிர் முகைதீன் கல்லூரி சார்பாக போலியோ விழிப்புணர்வு பேரணி !

இன்று [ 24-02-2013 ] தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணி முதல் துவங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. இதில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் சொட்டு மருந்துகள் வழங்கப்பட வேண்டும். இவற்றின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அதிரை நகரில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டனர் காதிர் முகைதீன் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள். 



முன்னதாக பேரணியை துவக்கி வைத்தார் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஜலால் அவர்கள்.

நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியை ஷஃபிரா பேகம், பேராசிரியர் கா. செய்யது அஹமது கபீர், முனைவர் O. சாதிக், பேராசிரியர் மு. பிரேம் நவாஸ் ஆகியோர் சிறப்பாக பேரணியை வழிநடத்தி சென்றனர். இந்த பேரணியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவியர் பெறும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

5 comments:

  1. பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்லதொரு பேரணி !

    கல்லூரி முதல்வர், பேராசிரியர் பேராசியைகள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் ஆகியோருக்கு பாராட்டுகள் - வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    விழிப்புணர்வில் இதுவும் ஒன்று, பொதுமக்களுக்கு புரியும் வகையில் நடந்த இந்த பேரணி பாராட்டக்குரியது.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. விழிப்புணர்வில் இதுவும் ஒன்று, பொதுமக்களுக்கு புரியும் வகையில் நடந்த இந்த பேரணி பாராட்டக்குரியது.

    ReplyDelete
  4. பகிர்ந்தமைக்கு நன்றி.

    இத்தகைய விழிப்புணர்வு பேரணி அவசியமானதே.

    ReplyDelete
  5. விழிப்புணர்வு பேரணி பாராட்டக்குரியது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.