.

Pages

Tuesday, February 19, 2013

அடிக்கடி டிரான்ஸ்பார்மர் பழுதால் அதிரை மக்கள் அவதி !

அதிரை முத்தம்மாள் தெரு, MSM நகர், ஷப்னம் லேன், KSA லேன் உள்ளடக்கிய ஆதம் நகர் ஆகிய பகுதிகளோடு காதிர் முகைதீன் கல்லூரி, காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ரைஸ் மில் மற்றும் சேது பெருவழிச்சாலையில் அமைந்துள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு, முத்தம்மாள் தெரு எதிரே இருக்கின்ற டிரான்ஸ்பார்மர் மூலம் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த டிரான்ஸ்பார்மரில் கூடுதல் இணைப்பின் காரணமாக அடிக்கடி பழுதடைந்தது விடுகிறது. மின்சார ஊழியர்கள் டிரான்ஸ்பார்மரில் எற்பட்ட பழுதை சரி செய்த சில மணி நேரங்களிலேயே மீண்டும் பழுதடைந்தது விடுகிறது. இதனால் இந்தப்பகுதியில் வாழும் பொதுமக்கள் வர்த்தகர்கள், மாணவ மாணவிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இந்தப் பிரச்சனையை 'மனித உரிமைக்காவலர்' KMA ஜமால் முஹம்மது அவர்களின் கவனத்துக்கு எடுத்துச்சென்ற உடனே சம்பந்தப்பட்ட மின்சார ஊழியர்களை வரவழைத்து பழுதை சரி செய்வதற்குரிய முயற்சியில் ஈடுபட்டார்.
நிரந்தர நடவடிக்கையாக இந்த டிரான்ஸ்பார்மரில் உள்ள கூடுதல் இணைப்புகளை பிரித்து புதிதாக மற்றுமொரு டிரான்ஸ்பார்மர் அதே பகுதியில் பொறுத்த வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.

மீண்டும் பல மணி நேர மின்வெட்டால் அதிரை மக்கள் அவதி :
அதிரையில் நாள் ஒன்றுக்கு பத்து மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது. காலை 6 மணி முதல் 9 மணி வரை மீண்டும் மதியம் 12 மணி முதல் 4 மணி வரை, இரவு 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 9 மணி முதல் 10 மணி வரை, இரவு 12 மணி முதல் 1 மணி வரை மின் துண்டிப்பு அமலில் உள்ளது. இதனால் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளதையொட்டி மாணவர்கள் இரவு நேரத்தில் ஏற்படும் மின்வெட்டு காரணமாக படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் குடிநீர் விநியோகத்திலும் தடங்கள் ஏற்பட்டுள்ளது.

3 comments:

  1. மீண்டும் மின்வெட்டா!.....அது சரி அதான் பழகி விட்டதே...விஷயதுக்கு வருவோம்.....அதிரை முத்தம்மாள் தெரு MSM நகர், ஷப்னம் லேன், KSA லேன் ஆகிய பகுதிகளுக்கு கூடுதல் இணைப்புகளை பிரித்து புதிதாக மற்றுமொரு டிரான்ஸ்பார்மர் அதே பகுதியில் பொறுத்த துரித நடவடிக்கை எடுக்க 'மனித உரிமைக்காவலர்' மற்றும் எனது "தகப்பனாராகிய" KMA ஜமால் முஹம்மது அவர்களை அன்பு மகனாகிய நானும் நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்,..அப்புறம் பக்கத்துல மின் ஊழியர்கள் துடிப்போடு சேவை செய்யுர மாறில ஈக்கிது?....

    _______________________________
    J.M MOHAMED NIZAMUDEEN
    S/O K.M.A JAMAL MOHAMED,
    www.nplanners.webs.com

    ReplyDelete
  2. அதிரையில் உள்ள அனைத்து பழுதடைந்துள்ள டிரான்ஸ் பார்ம் மற்றும் மின்கம்பங்களை சரிசெய்து விபத்துக்களை தவிர்க்க துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். செய்வார்களா...???

    யார் முன் வருவது..!!!

    அரசியல் வாதிகளா...!?

    தன்னார்வ தொண்டு நிறுவனரா...!?

    ஊர் மக்களா...!?

    ஊரில் உள்ள அமைப்புகளா...!?


    ReplyDelete
  3. முயற்ச்சித்தால் முடியும் அதுப்போல்த்தான் இந்த முயற்ச்சியும்.

    அந்த காலத்துள்ள சூரியனை பார்த்து மணி சொல்லுவார்கள் இப்போது மின்சாரம் அமத்துவத்தை பார்த்து மணி சொல்லிவிடலாம் டெக்னாலஜி எப்படி வளந்துள்ளது.

    அதற்க்காகவது தமிழ்நாடை பாராட்டவேண்டும்.

    மீதமுள்ள இரண்டு மணிநேரம் எதற்கு அதையும் பயன் படுத்திக்கொள்ளட்டும் மின்சாரவாரியம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.