.

Pages

Sunday, February 10, 2013

ஹஜ் பயணம் - 2013 : விண்ணப்பிக்க அரசு அழைப்பு !

தமிழ் நாட்டிலுள்ள இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த, ஹஜ் 2013-ல் ஹஜ் புனிதப் பயணம் 
மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்களிடமிருந்து, பல்வேறு நிபந்தனைகளுக்குட்பட்டு 
விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது.
ஹஜ் 2013-ற்கான விண்ணப்பப் படிவங்களை சென்னை-34, எண்.13, மகாத்மா காந்தி சாலை [நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை] யில், ரோஸிடவர், மூன்றாம் தளத்தில் இயங்கி வரும் தமிழ் நாடு 
மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து 6-2-2013 முதல் பெற்றுக் கொள்ளலாம் அல்லது இவ்விண்ணப்பங்களை www.hajcommittee.com என்ற இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து  கொள்ளலாம். விண்ணப்பப்படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை  மனுதாரர்கள் 
சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 20-3-2013.

வாழ் நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம் என்னும் ஹஜ் கொள்கையினைச் செயற்படுத்த இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதனால் கடந்த காலங்களில்  இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணம் மேற்கொள்ளாத நபர்கள்  மட்டும் ஹஜ் 2013-ல் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

சுய கையொப்பமிட்ட பாஸ்போர்ட்டின் நகல் / 20-3-2013 அல்லது அதற்கு முன்பு வழங்கப்பட்ட மற்றும் குறைந்தது 31-03-2014 வரையில் செல்லத்தக்க பாஸ்போர்ட்டை அசலாக விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து அனுப்புமாறு புனிதப் பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். IFS குறியீடு உள்ள இரத்து செய்யப்பட்ட பூர்த்தி செய்யப்படாத வங்கி காசோலையை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். ஹஜ் 2013 பற்றிய விவரங்களுக்கு ஹஜ் 2013-ற்கான வழிமுறைகள் கையேட்டைப் படிக்கவும்  அல்லது இந்திய ஹஜ் குழுவின் இணையதளம் www.hajcommittee.com ஐ அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு ரூ.300/- [ரூபாய் முன்னூறு மட்டும் ]-ஐ திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக [ Processing Fees ] பாரத ஸ்டேட் வங்கியின் இணைப்பு வங்கி திட்டத்தின் மூலம் இந்திய ஹஜ் குழுவின் பவர் ஜோதி கணக்கு எண். 32749477270-ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகலை இணைத்து தமிழ் நாடு மாநில ஹஜ் 
குழுவிற்கு 20-3-2013-ற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.  சிறப்பு வகைப் பிரிவின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயணிகள் அவ்வகைக்கான அனைத்து வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுமாறும் அவ்வகையின் கீழ் பரிசீலிப்பதற்கு ஏதுவாக அனைத்து நிபந்தனைகளை பூர்த்தி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வெளியீடு: 
இயக்குநர், செய்தி – மக்கள் தொடர்புத் துறை, சென்னை-9
Press Release No : 90

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.