.

Pages

Wednesday, March 6, 2013

மழை எதிரொலி : வெள்ளத்தால் பாதிப்படைந்த அதிரைப் பகுதிகள் !


தென்மேற்கு வங்ககடலில் புதிதாக உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்கிறது. நேற்று அதிகாலை அதிரையில் பெய்த பலத்த மழையில்  20 மில்லி மீட்டர் பதிவானது.

அதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை முதல் பலத்த மழை அதிரையில் பெய்து வருகின்றது. தொடர் மழையால் அதிரையில் உள்ள தாழ்வான பகுதியாக கருதப்படுகிற ஒரு சில இடங்கள் வெள்ளத்தால் மூழ்கி பாதிப்படைந்துள்ளன.

அதிகாலை முதல் பேரூராட்சி ஊழியர்களும் பாதிப்படைந்த பகுதிகளை சுத்தப்படுத்தி வருகின்றனர். புதுத்தெரு குடிசைப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது குறித்து அதிரை பேரூராட்சி தலைவர் அவர்களின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. உடன் துரித நடவடிக்கையில் இறங்குவதாக உறுதியளித்துள்ளார்.









4 comments:

  1. அதிரையில் பெய்த மழையினால் ஏற்ப்பட்ட பாதிப்பை புகைப்படங்கங்களுடன் அறியத்தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    அருமையான பதிவு, நேரில் பார்ப்பதை விட இந்தப் புகைப்படத்தில் பார்த்தாலே போதுமானது.

    தகவலுக்கு நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  3. மழை வந்தால்தான் தெரியுது ஊரின் அருமை.ஒரு நாள் பெய்யிந்த மழைக்கு இப்படியா?

    ReplyDelete
  4. மழை வந்தால்தான் தெரியுது ஊரின் அருமை.ஒரு நாள் பெய்யிந்த மழைக்கு இப்படியா? காரணம்? வீடு கட்டுவதற்கு முன் வாய்கள் வசதி பற்றி யோசிக்காதது..... சரிதானே?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.