.

Pages

Friday, March 22, 2013

பகுதிநேர பொறியியற் பட்டப்படிப்புக்கு ஏப்ரல் 1 முதல் விண்ணப்பிக்கலாம் !

2013-2014-ஆம் கல்வியாண்டிற்கு பகுதிநேர பொறியியற் பட்டப்படிப்பு [ B.E. / B.Tech. ] சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் கீழ்க்காணும் பொறியியற் கல்லூரிகளில் 01.4.2013 முதல் 15.4.2013 முடிய பயிலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வழங்கப்படும். 

1. அரசினர் பொறியியற் கல்லூரி - கோயம்புத்தூர் 641 013

2. அரசினர் பொறியியற் கல்லூரி - சேலம் 636 011

3. அரசினர் பொறியியற் கல்லூரி - திருநெல்வேலி 627 007

4. அழகப்ப செட்டியார் பொறியியற் கல்லூரி - காரைக்குடி 630 004

5. தந்தை பெரியார் அரசினர் பொறியியற் கல்லூரி - வேலூர் 632 002

6. அரசினர் பொறியியற் கல்லூரி - பர்கூர் 635 104

7. பி.எஸ்.ஜி. பொறியியற் கல்லூரி -  கோயம்புத்தூர் 641 004

8. கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி - கோயம்புத்தூர் 641 014

9. தியாகராஜர் பொறியியற் கல்லூரி - மதுரை 625 015

10. தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் - சென்னை 600 025

விண்ணப்ப படிவங்களை நேரடியாகவும் / அஞ்சல் மூலமாகவும் பெற விரும்புவோர், பிற இனத்தவர் ரூ.300/-ம் மற்றும் தமிழ்நாட்டைச் சார்ந்த பட்டியல் / பழங்குடி [ ST/SC/STA ]  இனத்தவர் ரூ.150/-க்குமான கேட்பு 
வரைவோலையினை [ Demand Draft ] The Secretary, Part time B.E. / B.Tech. Admissions,Coimbatore" என்ற பெயரில் கோயம்புத்தூரில் காசாக்கும் வகையில் [ Payable at Coimbatore ] எடுத்து விண்ணப்பங்களை மேற்காணும் விண்ணப்பம் விற்பனை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம். பழங்குடி மற்றும் பட்டியல் இனத்தவர்கள் கேட்பு வரைவோலையுடன், சான்றிடப்பட்ட [ Attested ] தங்களது சாதிச்சான்றின் நகலினை [ Xerox copy ] இணைக்க வேண்டும். 

அஞ்சல் மூலமாக பெற விரும்புவோர், கேட்பு வரைவவோலையுடன் சுய விலாசமிட்ட 35 செ.மீ X 25 செ.மீ அஞ்சல் உறையில் ரூ.50/-க்கு அஞ்சல் வில்லை ஒட்டி “The Secretary, Part time B.E. / B.Tech. Admissions, Coimbatore Institute of Technology Coimbatore” என்ற முகவரிக்கு கடிதம் மூலம் அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். 

மாணவர்கள் கலந்தாய்வுக்கு மே 2013-ல் அழைக்கப்படுவார்கள். இதற்கான அழைப்பு உரியவர்கட்கு தபால் மூலம் தெரிவிக்கப்படும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் “The Secretary, Part-time B.E. / B.Tech. Admissions, Coimbatore Institute of Technology, Coimbatore 641014” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 15.4.2013 

3 comments:

  1. பயனுள்ள தகவல்.

    அறியத்தந்தமைக்கு நன்றி.

    மாணாக்கள் இந்த வாய்ப்பினை பயன் படுத்திக்கொள்ளவும்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல்

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.