.

Pages

Thursday, March 7, 2013

தஞ்சை புத்தக கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் பயன்பெற பாடநூல் டிவிடிக்கள் விற்பனை !

கிங்ஸ் ரோட்டரி கிளப் சார்பில் 10 நாள் புத்தகத் திருவிழா தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலைய வளாகத்தில் கடந்த 1ம் தேதி முதல் புத்தக திருவிழா நடந்து வருகிறது. இதில் பெப்பில்ஸ் நிறுவனம் 63ம் நம்பர் ஸ்டாலில் உள்ளது. இந்நிறுவனம் சமச்சீர் மற்றும் சிபிஎஸ்சி பாடங்கள், ஆங்கில மற்றும் தமிழ் வழி மாணவர்கள் பயன்படக்கூடிய வகையில் பல்வேறு வகையான 2டி மற்றும் 3டி டிவிடிக்களை தயாரித்து குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பயன்படக்கூடிய வகையில் வெளியிட்டு வருகிறது. 

1 முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு சமச்சீர் டிவிடிக்கள் மாணவர்கள் மனதில் பதியும் வகையில் திரைப்படம்போல் பாடங்களை எளிதாக புரிந்துகொள்ள உதவும். 10 மற்றும் 12ம் வகுப்புக்கு 1, 2, 5, 10 மார்க் வினா வங்கி தலைப்பு வாரியாக நமக்கு நாமே பயிற்சி எடுத்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இவை அதிக மதிப்பெண்கள் பெற மாணவர்களுக்கு உதவும். மேலும் ஸ்போக்கன் இங்கிலீஷ், ஆங்கில இலக்கணம், ஸ்போக்கன் இந்தி போன்றவற்றை தமிழ் மொழியின் மூலம் எளிதாக கற்கலாம். பிரெஞ்ச், பொதுஅறிவு, என்சைக்ளோபிடியா என அனைத்து விதமான டிவிடிக்களும் விற்பனைக்கு உள்ளன. 1 முதல் 10ம் வகுப்பு வரை ஒலிம்பியாட் சிடிக்களும், 6 முதல் 10ம் வகுப்பு வரை தேர்வுக்கு தயார்படுத்தும் சிடிக்களும், யூபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி, என்டிஎஸ்சி உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுக்கு தயார்படுத்தும் சிடிக்களும், போட்டோஷாப், ஆட்டோகேட், மாயா, சி, விபி, ஜாவா போன்ற டியுட்டர் மற்றும் கேம்ஸ் சிடிக்களும் இடம்பெற்றுள்ளன. 

குட்டீஸ்களக்கான நர்சரி, செல்லப்பாப்பா பாடல்கள், உடற்பயிற்சி, நடனம், சுற்றுலாத்தலங்கள் பற்றிய விவரங்கள் போன்ற எண்ணற்ற தலைப்புகளில் சிடிக்கள் உள்ளன. ரூ.99 முதல் பல்வேறு விலையில் சிடி மற்றும் டிவிடிக்கள் உள்ளன. இந்த கண்காட்சியில் அனைத்து வகையான சிடிக்களுக்கும் 20 சதவீதம் முதல் சிறப்பு தள்ளுபடி உண்டு. மேலும் விவரங்களுக்கு 93802-84060 அல்லது 93818-08398 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இக்கண்காட்சி வரும் 10ம் தேதி வரை நடைபெறுகிறது.

3 comments:

  1. இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் மாணாக்கர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

    ReplyDelete
  2. இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் மாணாக்கர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

    ReplyDelete
  3. மாணவர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.