.

Pages

Monday, October 21, 2013

அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் [ AAF ] முதல் வருட நிறைவு மற்றும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சிகள் ! [ புகைப்படங்கள் ]

அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் [ AAF ] முதல் வருட நிறைவு மற்றும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நேற்று [ 20-10-2013 ] அமெரிக்கா நேரப்படி பகல் 12.30 மணியளவில் வாலோஹா நகரில் உள்ள இஸ்லாமிய மையத்தில் சிறப்பாக துவங்கியது.

இந்த கூட்டத்தின் அறிமுக உரையை AAF செயலாளர் சகோ. நஜிர் அவர்களும், ஆண்டறிக்கையை AAF தலைவர் சகோ. ஹக்கீம் அவர்களும், AAF பொருளாளர் சகோ. இக்பால் M. ஸாலிஹ் அவர்கள் கணக்கு விவரங்களையும் சமர்பித்தனர். இறுதியாக நன்றியுரையை AAF துணைத்தலைவர் சகோ. ஸிப்லி அவர்கள் நிகழ்த்தினார்.

முன்னதாக இந்தக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டன. இறுதியில் தற்போது செயலாற்றிகொண்டு இருப்பவர்களே நிர்வாகிகளாக தொடர்வார்கள் என கூட்டதில் கலந்துகொண்ட அனைவராலும் ஒருமித்த கருத்து ஏற்பட்டதையடுத்து கீழ்க்கண்ட நிர்வாகிகள் உறுதி செய்யப்பட்டனர்.

தலைவர் : சகோ. ஹக்கீம்
துணைத்தலைவர் : சகோ.ஷிப்லி
செயலாளர் : சகோ. நஜிர்
பொருளாளர் : சகோ. இக்பால் M. ஸாலிஹ் 
துணைச்செயலாளர் : சகோ. தமீம் அன்சாரி

பெரும்பாலான உறுப்பினர்கள் தங்களின் குடும்பத்தினருடன் வருகை தந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வந்திருந்த அனைவருக்கும் அறுசுவை உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

செய்தி தொகுப்பு : அதிரை நியூஸ்
தகவல் மற்றும் படங்கள் உதவி : M.M.S. பகுருதீன்













3 comments:

  1. Ugkalai allam padaththudan kaanum pothu anakku mana neyaintha santho sam vaalka....valkavea.

    ReplyDelete
  2. முதலில் நின்றுக்கொண்டு பானம் அருந்தலாமா? இப்படி செய்வதற்கு இஸ்லாத்தில் இடம் உண்டா?

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் !

    ஒற்றுமை என்னும் கயிறை பற்றி பிடுத்துக்கொளுங்கள் என்னும் திரு குர்ஆணின் வசனத்திருக்கு ஏற்ப்ப நம்மவர்கள் அமெரிக்காவிலும் ஒற்றுமையாக ஒரே தலைமையின் கீள் இருப்பது மிகுந்த சந்தோசமான விஷயம்.

    உங்களின் சேவைகள் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்....

    நெய்னா முஹம்மத் @ ரியாத் சவுதி அரேபியா
    (த/ப) ஜமால் முஹம்மத்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.