இதுகுறித்து தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அஹமது ஹாஜா அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய வகையில்...
இஸ்லாமிய பண்டிகைகளில் ஒன்றாகிய ஹஜ் பெருநாள் பண்டிகையை நேற்றைய தினம் இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிவிட்டு அதன் தொடர்ச்சியாக இன்று குர்பானி இறைச்சிகளை ஏழை எளியோர்களுக்கு தானமாக வழங்கி வருகின்றனர். இன்றைய தினம் மின்தடை ஏற்படுமானால் இறைச்சிகள் அனைத்தும் பாதுகாப்பதில் சிரமம் ஏற்படும். இதுகுறித்து த.மு.மு.க சார்பாக மின்சார அலுவலர்கள் மற்றும் வருவாய் அலுவலர்களின் கவனத்திற்கு எடுத்துச்சென்றுள்ளோம். கவனத்தில் எடுத்துக்கொள்வதாகக் கூறியுள்ளனர் இதில் சுமூகம் ஏற்படுமானால் போராட்டம் கைவிடப்படும். என்றார்.
கடைசிசெய்தி : த.மு.மு.க போராட்ட அறிவிப்பை அடுத்து அதிரை நகரில் இன்று அமல்படுத்த இருந்த மின்தடை விலக்கிகொள்ளப்பட்டுள்ளது. இதில் பெறும்முயற்சி எடுத்து அலுவலக வட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகம் ஏற்பட உதவிய அதிரை நகர காவல்துறை ஆய்வாளர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நகர த.மு.மு.க. சார்பாக நன்றியை தெரிவித்துள்ளனர்.
very good tmmk thanks for all mumbers
ReplyDelete