இந்த தீ விபத்தில் 11 கடைகளிலும் வைக்கப்பட்டிருந்த ரூ. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. யாரோ மர்ம நபர்கள் கடைக்கு தீ வைத்து விட்டதாக வியாபாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதைதொடர்ந்து இன்று காலை பாதிப்படைந்த பகுதிகளை நமது சட்ட மன்ற உறுப்பினர் N.R.ரெங்கராஜன் MLA அவர்கள் பார்வையிட்டு பாதிப்படைந்த கடைகளின் உரிமையாளர்களிடம் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் தனது சொந்த பணத்திலிருந்து தலா இரண்டாயிரம் ரூபாய் வீதம் மொத்தம் இருபதாயிரத்தை பத்து நபர்களுக்கு வழங்கினார்.
அதிரை நகர காங்கிரஸ் தலைவர் M.M.S. அப்துல் கரீம் , காங்கிரஸ் நிர்வாகிகள் M.M.S. பஷீர் அஹமது , சிங்காரவேலு , மூர்த்தி, அதிரை மைதீன் , கார்த்திக் உள்ளிட்ட காங்கிரசாரும் , திமு க நகர துணைச்செயலாளர் அப்துல் காதர் , 11 வது வார்டு உறுப்பினர் அன்சர்கான், தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அஹமது ஹாஜா, வர்த்தக சங்க செயலாளர் முகமது யூசுப் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் விபத்து குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று பாதிப்படைதவர்களுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
பாதிக்கப்பட்ட வணிகர்கள் துயரிலிருந்து மீண்டுவரவும், தாக்கப்பட்ட வீரர் விரைவில் குணமடையவும் அல்லாஹ் நாடிடுவானாக!
ReplyDeleteமார்கெட் பகுதியில் இது போன்று 2 3 தடவை தீ ஏற்ப்பட்டு உள்ளது இது எதனால் ஏற்ப்பட்டது .யாருடைய நாசவேளையுமா இல்ல எதிர் பாரத விபத்தா என்று தெரிய வில்லை, இனிமேல் இது போல் பத்தி எறியமல் அல்லாஹ்தான் காப்பாத்தனும்,
ReplyDeleteஅதிரை மார்கெட்டிற்கு என முன்பு கொர்க்காக்கள் காவல் இருந்தார்கள் அப்போது எந்தவித விபரீதமும் நடக்க வில்லை. ஆகவே கொர்க்காவை காவல் வைப்பது நல்லது என தெரிகிறது.
ReplyDelete