.

Pages

Sunday, October 13, 2013

கடற்கரைத்தெருவில் நடைபெற்ற AAMF ன் 12வது கூட்டம் !

அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் பன்னிரெண்டாவதுக் கூட்டம் நேற்று மாலை 4.30 மணியளவில் நமதூர் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி வளாகத்தில் ஜமாத் நிர்வாகி S.M.A. அக்பர் ஹாஜியார் அவர்களின் தலைமையிலும்,  AAMF'ன் தலைவர் M.M.S. சேக் நசுருதீன், AAMF'ன் துணைச்செயலர் A. முஹம்மது மொய்தீன், AAMF'ன் பொருளாளர் மான் A. நெய்னா முஹம்மது, கடற்கரைத்தெரு ஜமாத் நிர்வாகிகள் J.J. சாகுல் ஹமீத், அஹமது ஹாஜா ஆகியோரின் முன்னிலையிலும் மற்றும் ஏனைய நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் பங்களிப்புடன் இனிதே துவங்கியது.

நிகழ்ச்சியின் துளிகள் : 

1. கிராஅத் : S.M.A. அஹமது கபீர் அவர்கள்

2. வரவேற்புரை : A. முஹம்மது மொய்தீன் அவர்கள்

3. நமதூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் 24 மணி நேர சேவை வசதி செய்து தருவது தொடர்பான பிரச்சனை தொடர்ந்து காலதாமதமாகி வருவதை கருத்தில் கொண்டு இந்தக்கூட்டத்தின் முக்கிய பேசு பொருளாக எடுத்துக்கொண்டு விவாதிக்கப்பட்டன. இது தொடர்பாக கடந்த காலங்களில் எடுத்துக்கொண்ட முயற்சி பற்றி  M.M.S. சேக் நசுருதீன் அவர்களால் விளக்கப்பட்டது.

இந்த முயற்சியால் நமதூர் மட்டுமல்லாமல் நமதூரை சுற்றிவாழக்கூடிய பொதுமக்களுக்கு பயனளிக்கும் விதமாக அடுத்தக்கட்ட முயற்சியாக இவற்றை சம்பந்தப்பட்டவர்களின் பார்வைக்கு எவ்வாறு கொண்டு செல்லலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தங்களின் கருத்துகளை பதிந்தனர். அதில் சில கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இது குறித்து எதிர்வரும் ஹஜ் பெருநாள் கழித்து அடுத்தடுத்த நாட்களில் சிறப்புக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து விவாதிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நமதூர் கீழத்தெரு சங்கத்தில் நடத்த இருக்கும் இந்த சிறப்பு கூட்டத்தில் கலந்துகொள்ள நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு முறையாக அழைப்பு விடப்படும் [ இன்ஷா அல்லாஹ் ]

4. நீண்ட இடைவெளிக்கு பிறகு நடத்தப்படும் கூட்டம் என்பதால் இதுகுறித்து மேலத்தெரு தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்கத்தலைவர் B. ஜமாலுத்தீன் அவர்கள் வினாவிய கேள்விக்கு AAMF'ன் பொறுப்பாளர்கள் தாமதம் குறித்த காரணத்தை விளக்கினார்கள்.

5. கடற்கரைத்தெரு ஜமாத் நிர்வாகி J.J. சாகுல் ஹமீத் அவர்களின் நன்றியுரை மற்றும் அதனைத்தொடர்ந்து துவாவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றன.

இப்படிக்கு,
தகவல் தொடர்பாளர்
AAMF – அதிரை
படங்கள் உதவி : அதிரை நியூஸ்











No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.