பெரிய ஜும்மாப் பள்ளி, தக்வாப் பள்ளி, மரைக்கா பள்ளி, செக்கடிப் பள்ளி, முகைதீன் ஜும்மா பள்ளி, கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி, தரகர் தெரு [ ஆஷாத் நகர் ] ஜும்மாப்பள்ளி, புதுப்பள்ளி ஆகிய பள்ளிகளில் காலை 8 மணிக்கும், பிலால் நகர் மற்றும் அல் அமீன் ஜாமிஆ பள்ளியில் காலை 8.15 மணிக்கும் பெருநாள் தொழுகை நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சில பள்ளிகளில் தொழுகைக்கு முன்னர் சிறப்பு சொற்பொழிவும் நடைபெறும்.
அதிரையில் திடல் தொழுகைகள் :
பொருநாள் திடல் தொழுகை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடந்த நோன்பு பெருநாளில் நடைபெற்ற E C R ரோட்டில் பிலால் நகர் அருகே அமைந்துள்ள பெட்ரேல் பங்க் எதிரில் கிராணி மைதானத்தில் காலை சரியாக 7.15 மணிக்கு நடைபெறும் என்று அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது.
அதிரை ஈத் கமிட்டியால் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நடத்தி வரும் பெருநாள் திடல் தொழுகையை இவ்வருடமும் ஹஜ் பெருநாள் தொழுகை மேலத்தெரு சானவயலில் காலை சரியாக 7:30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது.
பெருநாள் அறிவிப்பை தொடர்ந்து அதிரையில் உள்ள அனைத்து மஸ்ஜித்களும் மின்னொளியால் களைகட்டின. வர்த்தக நிறுவனங்களில் குறிப்பாக ஜவுளிக்கடைகள், தொப்பிக்கடைகள், இறைச்சிகடைகள், காய்கறிக்கடைகள், சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் சுவிட் கடைகள் உள்ளிட்டவற்றில் வியாபாரங்கள் சூடு பிடித்துள்ளன.
குர்பானிக்காக ஆடு மாடு ஓட்டகங்கள் :
குர்பானிக்காக ஆயிரக்கணக்கான ஆடுகள், நூற்றுக்கணக்கான மாடுகள், ஒட்டங்கள் அதிரை நகருக்கு வந்துள்ளன. இதில் பல்வேறு சமூக அமைப்புகள் மூலம் பங்குகளாகவும், முழுவதுமாகவும் பிரித்து விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் இறைச்சி கடைகள் மூலமாகவும் முழு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
நகரில் முக்கிய பகுதிகளின் பிராதன சாலைகள் பரபரப்பாக காணப்படுகின்றன. வீதியெங்கும் மின்னொளியில் ஜோலிக்கின்றன. அதிரை மக்கள் தங்களின் மகிழ்ச்சியை உற்றார் - உறவினர் நண்பர்களோடு பகிர்ந்துகொண்டும் வருகின்றனர்.
அதிரை நியூஸ் குழு
மரைக்கா பள்ளியில் பெருநாள் தொழுகைக்கான கால நேரம் 6.30 மற்றும் 8 மணிக்கும் தொழுகை நடைபெறும்.
ReplyDeleteMaan. Shaikh