தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சார்பாக பெருநாள் திடல் தொழுகை E C R ரோடு பிலால் நகர் பெட்ரேல் பங்க் எதிரில் உள்ள கிராணி மைதானத்தில் இன்று காலை 7.15 மணிக்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றன. சொற்பொழிவில் சமுதாயத்தில் புழங்கும் போலியான ஒற்றுமை குறித்து மார்க்க அடிப்படையில் விளக்கி கூறப்பட்டது.
அதேபோல் அதிரை ஈத் கமிட்டியால் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்ற பெருநாள் திடல் தொழுகையை வழக்கம் போல் இந்த வருடமும் மேலத்தெரு சானவயலில் இன்று காலை 7.45 மணியளவில் சிறப்பாக நடந்தது. இதில் சேக்தாவூது ஃபிர்தவ்ஸி அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றன. சொற்பொழிவில் உளத்தூய்மை, மறுமை சிந்தனை, பெண்கள் அணியும் ஆடை ஆபரணங்கள் ஆகிய மூன்று விசயங்கள் குறித்து மார்க்க அடிப்படையில் விளக்கி கூறப்பட்டது.
அதிரையில் வசிக்கும் அனைத்து பகுதியில் உள்ள பெரும்பாலான ஆண்கள், பெண்கள் பெரும்திரளாக இரு தொழுகையிலும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். திடலில் பெண்களுக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருந்தன.
தொலைதூரத்திலிருந்து வந்த பெரும்பாலானோர் தங்களின் வாகனத்தை சாலையில் நிறுத்தி இருந்ததால் தொழுகை முடியும் வரை அப்பகுதி முழுதும் நெருக்கடியாக காணப்பட்டது.
"ஈதுல் அழ்ஹா"
ReplyDeleteஅஸ்ஸலாமு அழைக்கும்...
அகிலத்தார் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் நிம்மதியும் சந்தோஷமும் மிகுந்த நன்நாளாக இந்த
"தியாக திருநாள் "
ஆகட்டும்.
இன்ஷா அல்லாஹ்...!
அஸ்ஸலாமுஅலைக்கும், நல்ல ஆக்கம், அனைவருக்கும் ஹஜ்ஜு பெருநாள் நல்வாழ்த்துக்கள், இந்த பதிவில் பெண்கள் பக்கம் ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தய்வு செய்து அதை நீக்குமாறு அதிரை நியூஸ் நிர்வாகத்திடம் கேட்டுக்கொள்கிறேன். இனி வரும் காலங்களிலும் பெண்களின் பக்கம் புகைப்படம் எடுக்காமல் இருக்கவும் கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteஅனைவர்களுக்கும் எனது இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை