இந்நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலர் T. முருகேசன், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் P.முத்துக்குமாரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் தங்களை வாக்காளர் பட்டியலில் பதிவுசெய்து கொள்ள வலியுறுத்தியும் ஒவ்வொரு மாணவர்களும் வாக்களிப்பதின் முக்கியத்துவம் பற்றியும் சிறப்புச் சொற்ப்பொழிவு ஆற்றினார்கள்.
இவ்விழாவில் கட்டுரைப் போட்டி, கவிதை போட்டி நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டனர்.
முன்னதாக A.கலீல் ரஹ்மான் அவர்கள் வரவேற்ப்புரை நிகழ்த்தினார். விழாவின் இறுதியில் கா.மு.கல்லூரியின் துணை முதல்வர் A.M.உதுமான் முகைதீன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
இவ்விழாவினை பேராசிரியர் செய்யது கபீர் அவர்கள் தொகுத்து வழங்கினார். இதில் அனைத்து துறையைச் சார்ந்த துறைத்தலைவர்களும், பேராசிரியர்களும், மாணவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை