.

Pages

Monday, October 21, 2013

அதிரை பெரிய மார்க்கெட்டில் வாங்கிய திருக்கை மீனில் அரபி எழுத்துகள் பொறிக்கப்பட்டு இருந்ததா !?

அதிரை வாய்க்கால் தெருவைச் சார்ந்தவர் நெய்னா முஹம்மது. இவர் நேற்று காலை பெரிய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட திருக்கை மீனை தனது நண்பருடன் சேர்ந்து வாங்கி அவற்றை இரு பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை தனது வீட்டுக்கு கொண்டு வந்து மீனை சுத்தம் செய்திருக்கிறார். அப்போது அதில் அரபி எழுத்துகள் பொரிக்கப்பட்டு இருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டுள்ளார். இந்த செய்தி அப்பகுதி முழுதும் பரவியது. தகவலறிந்த அதிரை நியூஸ் செய்தியாளர் சாகுல் ஹமீது சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உண்மை நிலவரம் குறித்த தகவலை நெய்னா முஹம்மது அவர்களிடமிருந்து பெற்றார்.

இதுகுறித்து நெய்னா முகம்மது அவர்களிடம் பேசிய வகையில்...
நேற்று காலை நானும் எனது நண்பரும் ஒரு திருக்கை மீனை வாங்கி இரு பங்குகளாக பிரித்துக்கொண்டோம் அதில் எனது பங்குக்கு கிடைத்த மீனை வீட்டிற்கு கொண்டு வந்து சுத்தம் செய்யும் போது அதில் அரபி எழுத்துகள் பொறிக்கப்பட்டு இருந்ததை அறிந்து ஆச்சரியப்பட்டோம். உடனே இதன் உண்மை நிலவரம் அறிந்துகொள்வதற்காக கண்ணியத்திற்குரிய ஹைதர் அலி ஆலிம் அவர்களைச் சந்தித்து விவரம் கேட்டோம். இதில் குறிப்பிட்டுள்ள எழுத்துகள் அரபி எழுத்துகள்தான் ஆனால் ஒரே கோர்வையாக இல்லை என்றும், தனித்தனி எழுத்துகளாக சிதறியது போல் உள்ளன என்றும், பண்டைய காலத்து கல்வெட்டில் உள்ளது போல் இருக்கின்றன என்று கூறியிருக்கிறார்.

மேலும் கூறுகையில் இவற்றை புகைப்படங்கள் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இதுபோன்ற அத்தாட்சிகள் நிறைய மீன்களில் ‘லாயிலாஹா இல்லாஹ் முஹம்மதுர் ரசூல்லாஹ்” என்ற எழுத்துகள் தாங்கி வருகின்றன. இவை எதிர்காலத்தில் ஆவணமாக கூட பயன்படலாம். இந்த மீனை சமைத்து சாப்பிடலாம் என்ற கருத்தையும் கூறினார் என்றார்.

நாமும் இந்த அதிய மீனை ஆச்சரியத்துடன் பார்வையிட்டு அங்கிருந்து விடைபெற்று சென்றோம்.


12 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.