1. வெகுதூர பயணம் அப்பிரானிக்கு தொந்தரவல்லவா !?
2. குர்பானி அறுக்கும் வரை அதை மேய்பதற்க்கு அனுபவப்பட்டவர் இல்லாததால் இப்பிராணி சிரமம் மேற்கொள்வதாய் தெரிகிறது.
3. நம் ஊரில் மழை பெய்வதால் ஒட்டகத்திற்கு சீதோஷ்ண மாற்றம் உகந்ததல்ல.
4. ஒட்டகம் அறுக்கும் நபர் அனுபவப்பட்டவராய் இல்லாததால் அறுபடும் பொழுது துன்பம் மேற்கொள்கிறது.
5. நாம் அறுக்கும் ஆடு, மாடு கறிகள் ஏழைகளுக்கு பகிர்வதுபோல் ஒட்டக கறிகள் பங்கிடப்படுவது இல்லை என தெரிகிறது.
இப்படி சில சங்கடங்கள் இருப்பதால் இந்த பழக்கம் அதிரைக்கு சரிப்படுமா !? இல்லையா !? என்பதை யோசிக்க வேண்டும் குர்பானி கொடுக்கும் பிராணிகளுக்கும் சில தகுதிகள், சில வசதிகளை அல்லாஹ் சட்டமாக தந்துள்ளான் நாம் ஒட்டகம் குர்பானியாக கொடுக்க வேண்டும் என்ற ஆசையால் சட்டத்தை மீறிவிடாமல் இருந்தால்தான் நன்மை நம்மை வந்து சேரும். நல்லெண்ணத்தின் அடிப்படையில் ஒட்டக குர்பானி ஏற்பாட்டை செய்தவர்களின் மனம் கோணாதபடி கருத்திடுங்கள்.
மு.செ.மு. சபீர் அஹமது
அஸ்சலாமு அழைக்கும்,
ReplyDeleteசரியான கருத்துககல் முறையாக ஆலிம்களை வைத்து உரிய இயக்கக்-காரர்களை அணுகினாள் நிச்சயம் இன்ஷா அல்லாஹு தீர்வு கிடைக்கும்
ஏன் ஏற்புடையதில்லை !? கண்டிப்பாக மார்க்க நெறிமுறைகளுக்கு உட்பட்டு இருந்தால் அதிரைக்கு மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைவரும் ஏற்று செயல்படக்கூடியதே !
ReplyDeleteதலையங்கத்தில் குறிப்பிட்டுள்ள ஐந்து ஆதங்களும் நியாமானதுதான்... இவைகள் அனைத்தையும் தவிர்த்துக்கொள்வது அவசியம்.
அதேபோல் தெருத்தெருவா குர்பானி ஒட்டங்களை ஊர்வலமிட்டு அழைத்துச் செல்வது கூடுமா !? அறிந்தவர் அறியத்தரலாம்
ReplyDeleteகுர்பானிகுடையது வேடிக்கை காட்ட அல்ல.
Delete1. வெகுதூர பயணம் அப்பிரானிக்கு தொந்தரவல்லவா !?
ReplyDeleteகுர்பானி கொடுக்க ஆடு,மாடு கிடைக்கவில்லையா ? இலகுவாக கிடைக்கின்றது. குர்பானி நிறைவேற்றுவதற்கு வசதிகள் இருக்கும்பொழுது வெகுதூர பயணம் அப்பிராணிக்கு கஸ்டமே. நம்மவூர் சீதோஷணம் அதற்கு எப்படி ஏற்கக்கூடும் ? அடுத்த ஊரில் குளிப்பதற்கு எனக்கு தண்ணீர் ஒத்துக்கொள்ளாது என்று நம்மவர்கள் பலர் அடிக்கடி கூறுவார்களே. வலிதெரியாமல் அறுக்கவேண்டும் என்ற சட்டங்கள் மிகவும் நுணுக்கமாக இருக்கும் பொழுது இது தொந்தரவல்ல்லவா ?!
2. குர்பானி அறுக்கும் வரை அதை மேய்பதற்க்கு அனுபவப்பட்டவர் இல்லாததால் இப்பிராணி சிரமம் மேற்கொள்வதாய் தெரிகிறது.
உண்மையே. அதனை வளர்ப்பவருக்குத்தான் அதன் தேவைகளை அறிந்து செயல்படுத்தத் முடியும். இங்கு அனுபவப்பட்டவர் இல்லை.
3. நம் ஊரில் மழை பெய்வதால் ஒட்டகத்திற்கு சீதோஷ்ண மாற்றம் உகந்ததல்ல.
குளிரில் வாழும் வெள்ளையர்கள்-ஆண்கள் நம் நாட்டில் காக்கால் டவுசர்வுடன் முண்டா பெனியன் சிலசமயம் பெனியன் இல்லாமலும் நடந்து போவதை நாம் பார்த்தே வருகிறோம். பெண்களும் பெனியன் டவுசருடன் போவதையும் பார்த்துதான் இருக்கின்றோம்.
எனவே பாலைவன வெயிலிலே வாழும் அமைப்பை பெற்ற பாலைவன கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகத்திற்கு நம்மவூர் சீதோஷணம் உகந்ததல்ல.
4. ஒட்டகம் அறுக்கும் நபர் அனுபவப்பட்டவராய் இல்லாததால் அறுபடும் பொழுது துன்பம் மேற்கொள்கிறது.
தாங்கள் கூறியது உண்மையே.
5. நாம் அறுக்கும் ஆடு, மாடு கறிகள் ஏழைகளுக்கு பகிர்வதுபோல் ஒட்டக கறிகள் பங்கிடப்படுவது இல்லை என தெரிகிறது.
இலகுவாக அடிக்கடி கிடைக்கும் பொருளைத்தான் பிறருக்கு கொடுக்க எண்ணம் பெரும்பாலோருக்கு வரும். வெளியில் வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். நடைமுறை உணருவது நல்லது. சொந்த பந்தங்களுக்கு கொடுக்கலாம்.
நல்ல விழிப்புணர்வு.
\\அதேபோல் தெருத்தெருவா குர்பானி ஒட்டங்களை ஊர்வலமிட்டு அழைத்துச் செல்வது கூடுமா !? \\
ReplyDeleteஅவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக! அல்குர்ஆன் (22 : 37)
இறுதி நாளில் மூன்று வகையான ஆட்களை அல்லாஹ் நரகத்திற்கு சொல்லும்படி அல்லாஹ் கடையிடுவான் அதில் ஒருவர் செல்வந்தர் அவர் கூறுவார் அல்லாஹ் உணக்காகத்தான் என்னுடைய செல்லவங்களை ஏழைகளுக்கு தர்மமாக வழங்கினேன் என்று சொல்வார் அதற்கு இறைவன் சொல்லுவான் நீ தர்மம் செய்து உண்மைதான் எனக்காக நீ செய்யவில்லை உன்னை எல்லோரும் சொல்வந்தர் என்று புகழ்வதற்காக செய்தாய் அந்த பாராட்டு உணக்கு புமியில் கிடைத்துவிட்டது போ நரகத்திற்கு என்ற உரையாடள்கள் நடைபெறும் என்று ஹதீஸில் வந்துள்ளது.
இவர்கள் தெரு தெருவாக ஒட்டகத்தை அழைத்துச் செல்வதால் கூட்டு குர்பாணியில் பங்கு செர்ந்தவர்களுக்கு நன்மை கிடைக்காமல் போய்விடுமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. இனி வருங்காளங்களில் கூட்டு குர்பாணியில் சேருபவர்களும் ஒட்டகத்தை வாங்கி வருபவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்
\\ நாம் அறுக்கும் ஆடு, மாடு கறிகள் ஏழைகளுக்கு பகிர்வதுபோல் ஒட்டக கறிகள் பங்கிடப்படுவது இல்லை என தெரிகிறது.\\
ஆடு, மாடு குர்பாணி கொடுக்கும் போது அதன் மாமிசம் ஏழைகளுக்கு கிடைக்கிறது ஒட்டகத்தை குர்பாணி கொடுப்பவர்களும் அதை ஏற்பாடு செய்பவர்களும் 20 கிலோ பங்கு என்று விளம்பரம் செய்கிறார்கள் அதையாள் ஒட்டகத்தில் பங்கு செர்பவர்கள் 20 கிலோ கறியையும் வாங்கி செல்லுகிறார்கள் ஒட்டகத்தின் இறைச்சி ஏழைகளுக்கு கிடைப்பது இல்லை என்பது உண்மை
Veadekkai katdenal thanea kathaiyai otdamudeyum. Padam katduvaththan eppo movus
ReplyDeletenanmaiyai evungal theemaiyai thadungal.. kurbaani piraaniyai theruvil alaithu selvathu mattravargal kurippaaga panam irunthum manam illaathavargal paarthu thelivaagattum...
ReplyDelete