.

Pages

Thursday, October 31, 2013

பள்ளி அருகே வேகத்தடை ! சமூக ஆர்வலரின் ஆதங்கம் !!

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு செல்லும் பிரதான வழியாக ஈசிஆர் சாலை உள்ளதால் மாணவர்கள் மதிய இடைவேளையின் போதும், வகுப்புகள் முடிந்த பிறகும் அவரவர்களின் வீடுகளுக்கு செல்ல இச்சாலை வழியே கடந்து செல்கின்றனர். இச்சாலையில் செல்லும் வாகனங்களும் அசுர வேகத்தில் செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன.

இதுகுறித்து சமூக ஆர்வலர் சாகுல் ஹமீதிடம் பேசிய வகையில்...
'இந்தப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் அதிக எண்ணிக்கையில் விபத்துகள் நடந்துள்ளன. இந்த நான்குவழி இணைப்பு சாலையில் வேகத்தடை ஏற்படுத்தி, விபத்து பகுதி என எச்சரிக்கை பலகையையும் வைத்தால் ஓரளவு விபத்தை குறைக்கலாம்' என்கின்றார்.

இவர் சொல்வதிலும் நியாயம் இருப்பதை நாம் உணர முடிகிறது. சம்பந்தபட்ட நெடுஞ்சாலை துறையினர் மாணவர்களின் நலனில் அக்கறைகொண்டு வேகத்தடை ஏற்படுத்திக்கொடுப்பது அவசியம்.



5 comments:

  1. எத்தனையோ சமூக ஆர்வலர்கள்,தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பொதுச் சேவையர்கள் என்று நிறைந்திருக்கும் நமதூரில் இந்த முக்கிய நால்வழிச்சாலைக்கு ஒரு வேகத்தடையை இதுவரை அமைக்க முயற்சி காமல் இருப்பது வேதனையாக இருக்கிறது.

    ReplyDelete
  2. அவசியம் வேகத்தடை வேண்டும் இந்த நால்வழிச்சாலையில்.

    ReplyDelete
  3. பள்ளி அருகே வேகத்தடை இல்லையே என்று சமூக ஆர்வலர்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முயற்சி செய்தாள் போதாது சம்மந்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகம் இது வரை ஏன் எந்த முயற்சியும் செய்யவில்லை அல்லது முயற்சி செய்து நடக்கவில்லையா நமதூர் 2 நம்பர் பள்ளி அருகிலெல்லாம் போடப்பட்டிருக்கும் வேகத்தடை இங்கு மட்டும் இல்லாமல் இருபதற்க்கு காரணம் பள்ளி நிர்வாகதோடு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து முயற்சி செய்யலாமே. அவசியம் அந்த இடத்தில் வேகத்தடை தேவை அதற்கான முயற்சியில் இறங்கவும்.காலதாமதம் செய்யாமல் உடன் நடவடிக்கை எடுக்கவும்

    ReplyDelete
  4. பள்ளி நிர்வாகதோடு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து முயற்சி செய்யலாமே. அவசியம் அந்த இடத்தில் வேகத்தடை தேவை அதற்கான முயற்சியில் இறங்கவும்.காலதாமதம் செய்யாமல் உடன் நடவடிக்கை எடுக்கவும்

    ReplyDelete
  5. விபத்து பகுதி என எச்சரிக்கை பலகையையும் வைத்தால் ஓரளவு விபத்தை குறைக்கலாம்'

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.