செட்டியா குளத்தில் உள்ள கழிவுகளை ஜேசிபி எந்திரம் மூலம் அள்ளப்பட்டு அவற்றை டிராக்டர்கள் மூலம் தேவையான இடங்களுக்கு எடுத்துச்சென்று வருகின்றனர். இவ்வாறு எடுத்துச்செல்லும் கழிவுகள் கீழே கொட்டுவதால் குடியிருப்பு சாலைகள் நாசமாகி வருகின்றன.
கடந்த சிலநாட்களுக்கு முன்பு அதிரையில் பெய்த தொடர் மழையால் சாலை முற்றிலும் நாசமாகியது. இதனால் அப்பாதை வழியே செல்லும் பொதுமக்கள் பலர் வழுக்கி விழும் அவலநிலை தொடர்ந்தது. கடந்த 23-10-2013 அன்று வாய்கால் தெரு குடியிருப்பு பகுதியின் வழியே டிராக்டர்கள் மூலம் கொண்டு சென்ற கழிவுகள் கீழே கொட்டி சாலைகள் முற்றிலும் நாசமாகியதை கண்டித்து அதிரை நகர த.மு.மு.க வினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஒப்பந்தக்காரரோடு நடத்திய பேச்சுவார்த்தையில் சாலையில் கொட்டும் கழிவுகளை தினமும் மாலை வேளையில் ஊழியர்களைக்கொண்டு அப்புறப்படுத்தப்படும் என உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்
இதன் தொடர்ச்சியாக மீண்டும் இன்று மாலை 3 மணியளவில் சேர்மன் வாடி வழியாக கழிவுகள் எடுத்துசெல்லப்பட்டன. தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது டிராக்டர் வாகனங்களை அதிவேகமாக ஓட்டிச்செல்வது, அதிகமான கழிவுகளை ஏற்றிச்செல்வது, கழிவுகள் கீழே கொட்டிச்செல்வது ஆகியன குறித்து ஒப்பந்தக்காரர் மற்றும் டிராக்டர் உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் இந்தப்பகுதி முழுதும் பரப்பரப்பாக காணப்பட்டது.
தகவலுக்கு நன்றி.
ReplyDeleteநாம் வாழும் நாடு, ஊர் ஹை டெக் வசதியுடன் அமையப் பெறவில்லை.. வளர்ந்து வரும் நாடுகளில் /ஊர்களில் அமையப் பெற்ற ஒன்று.அந்த வகையில் சகதிகளை அள்ளிச் செல்ல மாற்று வழி இருந்தும் பொதுமக்கள் அதிகம் புழங்கும் பகுதியில் அள்ளிச் சென்றிருந்தால் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும்.
ReplyDeleteஆனால் வேறு வழியில்லை என்றால் எந்த வழியில் அள்ளிச் செல்வது? இதற்காக ஆர்ப்பட்டம் எல்லாம் அவசியமா? என்று தெரியவில்லை.
சேற்றையும் சகதியையும் சுத்தம் செய்யவும் சொல்கிறோம் அதனை அள்ளிச் செல்லவும் கூடாது என்றால் என்ன அர்த்தம்.?
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
குளம் தூர்வாரப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. கழிவுகள் அகற்றப்படுகிறது. வழி குடியிருப்பு பகுதி. கழிவுகளை தாங்குவது டிராக்டர். அந்த டிராக்டரில் ஆயிரத்து எட்டு ஓட்டைகள். குண்டும் குழியுமான வழித்தடங்கள். கழிவுகளின் நடனம். ஆடுகின்ற ஆட்டத்தில் வழியில் விழுகின்றது.
குண்டும் குழியுமான வழித்தடங்களாக இருக்கட்டும், ஓட்டை ஒடசல் இல்லாமல் வாகனங்களை சரிசெய்ய முடியாதா?
மக்களின் வயிறு எரிந்தால் அப்புறம் என்ன நடக்கும் என்று சிந்தித்து பாருங்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
அதிரையின் செட்டியான் குளம், கழிவு நீர் குளமாக காட்சி தரும் இக்குளம் தூர்வாரப்பட்டு நன்னீர் குளமாக மாற்றப்படுவது அனைவரும் அறிந்ததே. இத்திட்டம் உண்மையிலேயே வரவேற்கத்தக்க, பாராட்டுதலுக்குரிய திட்டம். காரணம், இக்குளத்தில் தேங்கியுள்ள கழிவு நீரின் மூலம் கொடிய வகை கொசுக்கள் உற்பத்தியாகி பல வகை நோய் ஏற்படுவதற்கு காரணமாகின்றது. சுகாதாரத்தை முன்னிறுத்தி செய்யப்படக்கூடிய இந்த திட்டத்தை அனைவரும் ஆதரிக்கிறார்களே ஒழிய எதிர்க்கவில்லை.
ReplyDeleteஅதே வேளை, அக்குலத்திளிருந்து அப்புறப்படுத்தப்படும் கழிவுகள் முறையாக எடுத்துச்செல்லப்படுவதில்லை என்பாத்து அனைவரின் ஆதங்கம். ஓரு பக்கம் சுகாதாரத்தை ஏற்படுத்த முயலும்பொழுது இன்னொரு பக்கம் இருக்கும் சுகாதாரத்தை அழிப்பது எவ்வகையில் நியாயம் (?)
அவ்வகையில், செட்டியான் குளத்திலிருந்து அகற்றப்பட்டு டிராக்டர்கள் மூலம் எடுத்துவரும் கழிவுகள் அதன் சக்கரங்களில் ஒட்டிக்கொண்டு முக்கிய தெருக்கலான வாய்க்கால் தெரு, கிட்டங்கி தெரு சேர்மன் வாடி வழியாக செல்கிறது, அப்படி செல்லும் டிராக்டர்கள் அதிவேகமாகவும் அதன் டிரெய்லர்களில் ஓட்டைகள் உள்ளதாலும், அதிக அளவு கழிவுகளை எடுத்துச்செல்வதாலும் சாலைகளில் சிந்திக்கொண்டே செல்கிறது. அவ்வாறாக கொட்டும் கழிவுகளில் பிளாஸ்டிக் பைகளும் நிறைந்து காணப்படுகிறது.
அவ்வாறான கழிவுகள் வெயில் நேரங்களில் கடும் தூசியை கிளப்பிவிடுகின்றது, அதன் மூலம் சளி, இருமல் போன்ற உபாதைகளுக்கு பொதுமக்களும் இத்தெருவாசிகளும் ஆளாகின்றனர். மேலும் மழை காலங்களில் சாலையின் மேல் படிந்துள்ள கழிவுகள் சகதிகளாக மாறி பாதசாரிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் சிரமத்தை கொடுக்கின்றன.
ஆகையால், தெருக்களில் ஏற்கனவே படிந்துள்ள கழிவுகளை தண்ணீர் தெளித்து அகற்றப்பட வேண்டும். மேலும் இனிமேல் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாதவாறு இரவு நேரங்களிலோ அல்லது மேலே கூறிய காரணங்களை களைந்து இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
//சேற்றையும் சகதியையும் சுத்தம் செய்யவும் சொல்கிறோம் அதனை அள்ளிச் செல்லவும் கூடாது என்றால் என்ன அர்த்தம்.?//
ReplyDelete// ஓட்டை ஒடசல் இல்லாமல் வாகனங்களை சரிசெய்ய முடியாதா?//
கிட்டத்தட்ட ஒரு மாமாங்கமாக (12 ஆண்டுகள்) கொசுக்களின் உற்பத்தி தொழிற்சாலையாக இருந்த செட்டியான்குலம் தூர்வாரப்படுவது பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஒரு நல்ல காரியம் நடக்கும்பொழுது ஏதாவது இடையூறு வரத்தான் செய்யும். இன்ஷா அல்லாஹ் தூர்வாரி முடிந்து நல்ல பெரும் மழைவந்தால் எல்லாம் சரியாகிவிடும். நாம் அனைவரும் மழைக்காக இறைவனிடம் கை ஏந்துவோமாக. காண்டிராக்ட் எடுத்தவர்களும் சற்று மக்களின் வேண்டுகோளை கருத்தில் கொள்வது அவசியமே.
ReplyDeleteசிங்கப்பூரை போல நமதூரை மாற்ற, பொது மக்களாகிய நம்முடைய ஒதுழுப்பு அவசியம் வேண்டும் என்று சேர்மன் அவர்கள், பதவி ஏற்ற அன்றே முக்கிய வேண்டுகோளாக வைத்தார் என்பதை நம் சமுதாயம் மறக்கக்கூடாது. சேர்மன் அவர்கள் எந்த வகையிலாவது நல்ல மாற்றங்களை கொண்டு வர பாடு படுகிறார், ஆனால் சரியான ஒத்துழைப்பு எந்த தரப்பிலும் இல்லாமல் இருப்பது துரதிர்ஷ்டம்.
ReplyDeleteபோதாதற்கு பொய் வழக்கு வேறு போட்டுள்ளார்கள் நம்மில் சில நல்லவர்கள். எங்கிருந்து சாதிக்க முடியும் அவரால். ஆனால் உண்மை வென்றே தீரும்.
ஆமாங்க நான்கூட கேள்விப்பட்டேன், chairman அப்படி சொன்னதாக. நம்மவர்கள் சற்று அவரோடு ஒத்துழைத்தால் நல்ல பல மாற்றங்களை கொண்டு வரமுடியும். ஒரு புறம் தோற்றவர்களின் காழ்புணர்ச்சி மறு புறம் பொறாமை. இருந்தாலும் chairman போராடிக்கொண்டு இருக்கிறார், முடிந்தவரை நல்லது பண்ண. நடுநிலையாளர்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இயக்கங்கள் வேண்டுமானால் கூடிக்கொண்டு எதையாவது செய்யலாம் உரிய நேரத்தில் மக்கள் செய்ய வேண்டியதை செய்து காட்டுவார்கள்.
ReplyDelete