.

Pages

Wednesday, October 23, 2013

சகதிகளை குடியிருப்பு பகுதியின் வழியே அள்ளிச்செல்வதை கண்டித்து த.மு.மு.க வினர் சாலை மறியல் !

"சகதி சாலையாக மாறிய வாய்க்கால் தெரு ! நடந்து செல்லும் பொதுமக்கள் அவதி !" , " பொதுமக்களை வழுக்கி விழச்செய்யும் வாய்க்கால் தெரு சகதி சாலை ! " ஆகிய தலைப்புகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்களின் ஆதங்கத்தை தளத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

அதன் தொடர்ச்சியாக கடந்த சிலநாட்களுக்கு முன்பு அதிரையில் பெய்த தொடர் மழையால் சாலை முற்றிலும் நாசமாகின. இதனால் அப்பாதை வழியே செல்லும் பொதுமக்கள் பலர் வழுக்கி விழும் அவலநிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலை நீடிக்குமானால் வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்பட்டுவிடும் என்ற பொதுமக்களின் அறிவிப்பையும், சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கவனத்தில் கொண்டு சரிசெய்வதுதான் சிறந்தது என்ற சமூக ஆர்வலர்களின் கருத்தையும் அதில் குறிப்பிட்டு எழுதிருந்தோம்.

இன்று காலை மீண்டும் வாய்கால் தெரு குடியிருப்பு பகுதியின் வழியே ட்ராக்டர்கள் மூலம் செட்டியா குளத்தின் கழிவுகளை அள்ளிச் சென்றதால் ஏராளமான கழிவுகள் கீழே கொட்டி சாலைகள் நாசமாகின.

தகவலறிந்த அதிரை நகர த.மு.மு.க வினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 13 வது வார்டு த.மு.மு.க செயலாளர் ஹாலித், த.மு.மு.க.மாவட்டச் செயலாளர் அகமது ஹாஜா, நகரத் தலைவர் சாதிக் பாட்சா, நகர செயலாளர் தமீம், நகர பொருளாளர் செய்யது முகம்மது புகாரி ஆகியோர் காண்ட்ராக்டர் சுல்தான் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சாலையில் கொட்டும் கழிவுகளை தினமும் மாலை வேளையில் ஊழியர்களைக்கொண்டு அப்புறப்படுத்தப்படும் என உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் இந்த பகுதி முழுதும் சிறிது நேரம் பரப்பரப்பாக காணப்பட்டன.

செய்தியும், புகைப்படமும் 'அதிரை நியூஸ்' சாகுல் ஹமீது




1 comment:

  1. அவசியமான போராட்டம் நன்றி.த மு மு க.குழு

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.