.

Pages

Friday, October 4, 2013

தீ விபத்து பகுதிகளை முன்னாள் மத்திய இணைஅமைச்சர் S.S. பழனிமாணிக்கம் MP பார்வையிட்டார் !

அதிரை தக்வா பள்ளி நிர்வாகத்திற்கு சொந்தமான மார்கெட் பகுதியில் கடந்த [ 03-10-2013 ] அன்று இரவு 10.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் உணவகங்கள், பலசரக்குக் கடைகள், தொப்பிக்கடை, சலூன் கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள்  முற்றிலும் எரிந்து சாம்பலாகின. கடைகளில் இருந்த பொருட்கள் பெரும்பாலும் தீயில் எரிந்து சாம்பலாகின.

இன்று பகல் 12.30 மணியளவில் பாதிப்படைந்த பகுதிகளை முன்னாள் மத்திய இணைஅமைச்சரும், தஞ்சை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய S.S. பழனிமாணிக்கம் MP அவர்கள் பார்வையிட்டு பாதிப்படைந்த கடைகளின் உரிமையாளர்களை சந்தித்து தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொண்டார். மேலும் புதிதாக கட்டிவரும் மீன் மார்க்கெட் வளாகத்தையும் பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அதிரை பேரூராட்சித்தலைவர் அஸ்லம் அவர்களை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

தக்வா பள்ளி டிரஸ்ட் தலைவர் அப்துல் சுக்கூர், திமுக நகர செயலாளர் இராம. குணசேகரன், திமுக நகர நிர்வாகிகள் அப்துல் காதர், அன்சர்கான், அப்துல் ஹலீம், முஹம்மது செரீப், முல்லை மதி உள்ளிட்ட ஏராளமான கழக முன்னோடிகள் உடனிருந்தனர்.







7 comments:

  1. நமது பேரூராட்சி தலைவர் அஸ்லம் காக்காக்கு என்ன ஆச்சு? அவர் ஏன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார்?

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அழைக்கும்
    நீங்க யாருந்தேரியலே தயவு செய்து எரிகிற தீயில என்னையே உற்றாதிங்க அல்லாஹ் உங்களுக்க பரக்கத் செய்வானாக, சிந்தித்து செயல்படும் ஆற்றலை அளிப்பானாக தயவு செய்து இதுபோன்று துணுக்கான கேள்விகளை கேட்பதை நிறுத்திவிட்டு ஊர் ஒற்றுமைக்காகவும் தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உரிய கிடைக்க வல்ல ரஹ்மானிடம் துஆ செயின்கள்

    ReplyDelete
    Replies
    1. wa alaikumussalam, bro i dont knw wats wrong with my comment? can u mention wats the wrong in my comment?

      Delete
  3. அஸ்ஸலாமு அழைக்கும்
    நீங்க யாருந்தேரியலே தயவு செய்து எரிகிற தீயில என்னையே உற்றாதிங்க அல்லாஹ் உங்களுக்க பரக்கத் செய்வானாக, சிந்தித்து செயல்படும் ஆற்றலை அளிப்பானாக தயவு செய்து இதுபோன்று துணுக்கான கேள்விகளை கேட்பதை நிறுத்திவிட்டு ஊர் ஒற்றுமைக்காகவும் தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க வல்ல ரஹ்மானிடம் துஆ செயின்கள்

    ReplyDelete
  4. I heard that some one slashed chairman Mr.Aslam. Why there is no information in Adirai Medias....what is going on????

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அழைக்கும்
    நீங்க யாருந்தேரியலே தயவு செய்து எரிகிற தீயில என்னையே உற்றாதிங்க அல்லாஹ் உங்களுக்க பரக்கத் செய்வானாக, சிந்தித்து செயல்படும் ஆற்றலை அளிப்பானாக தயவு செய்து இதுபோன்று துணுக்கான கேள்விகளை கேட்பதை நிறுத்திவிட்டு ஊர் ஒற்றுமைக்காகவும் தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க வல்ல ரஹ்மானிடம் துஆ செயின்கள்

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.