.

Pages

Tuesday, October 8, 2013

அதிரை அருகே ஏற்பட்ட வாகன விபத்தில் பள்ளி மாணவிகள் உட்பட ஐந்துபேர் காயம் !

நேற்று மாலை அதிரையை அடுத்து மஞ்சவயல் ஈசிஆர் சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் இரு பள்ளி மாணவிகள் உட்பட ஐந்து பேர் காயம்.

முத்துபேட்டையை சேர்ந்தவர் சிரோமி. சம்பவத்தன்று லாரல் பள்ளியில் படிக்கும் தனது இரு மகள்கள் ஜெரின் [ வயது 9 ], ஜெனிபா [ வயது 6 ] ஆகிய இருவரையும் வகுப்புகள் முடிந்து தனது மாருதி ஆல்டோ வாகனத்தில் வீட்டிற்கு அழைத்து செல்லும் வழியில், மஞ்சவயல் என்ற கிராமத்தை கடக்கும் போது கேரளா பாலக்காட்டிலிருந்து நாகூரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இன்னோவா வாகனம், மாருதி ஆல்டோவின் பின்புறமாக மோதியதில் பள்ளி மாணவிகள் உட்பட இரு வாகனங்களிலும் பயணம் செய்த ஐந்து நபர்கள் காயமுற்றனர்.

இரு மாணவிகளும் முத்துப்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து அதிரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Thanks : Reporter SIVA

3 comments:

  1. விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிராத்திப்போம்.
    விபதிருக்குள்ளான வாகனத்திற்கு பின்னால் KEEP DISTANCE என்று ஆங்கிலத்தில் எழுத பட்டுள்ளது. அதற்க்குபதிலாஹா தமிழில் ( இடைவெளி விட்டு வரவும்) என்று எழுதி இருந்தால் பின்னல்வந்து மோதிருக்க வாய்ப்பில்லை

    ReplyDelete
    Replies
    1. Language is not important, but they should read and do...if they write in Tamil, how malayali can read tamil, as the vehicle came from Kerala "கேரளா பாலக்காட்டிலிருந்து நாகூரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இன்னோவா..."

      Delete
  2. விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிராத்திப்போம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.