.

Pages

Friday, October 25, 2013

பாழடைந்து காணப்படும் அதிரை இரயில்வே நிலையத்தில் சமூக விரோத செயல் !

அதிரை இரயில்வே நிலைய வளாகத்தில் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடப்பதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர்.

அகலப் பாதை பணிகளுக்காக திருவாரூர் முதல் பட்டுக்கோட்டை வரையிலான மீட்டர் கேஜ் ரயில்பாதை கடந்த அக்டோபர் 19ம் தேதியுடன் மூடப்பட்டதை நாம் அறிந்த ஒன்றே.

இந்த இரயில்வே வளாகம் மூடிய அன்றிலிருந்து பராமரிப்பின்றி பாழடைந்தும், ஆள் நடமாட்டம் குறைந்தும் காணப்பட்டு வருவதால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் புகலிடமாக இருந்து வருகின்றன. குறிப்பாக இரயில்வே நிலைய வளாகப்பகுதியில் மது பாட்டில்கள், ஆணுறைகள் உள்ளிட்டவற்றை ஆங்காங்கே காணப்படுவதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் சிலர் சங்கடத்துகுள்ளாகின்றனர்.

இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சமூக விரோத செயலில் ஈடுபடுவோரை இனங்கண்டு காவல்துறையினருக்கு தகவலை தெரிவிப்பதும், அதே போல் காவல்துறையினர் இரவு நேரங்களில் இந்த பகுதியில் ரோந்து வந்து கண்காணிப்பதும்,  இது போன்ற சமூக விரோத செயலை தடுக்க இயலும் என்கின்றனர் நகரில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள்.

செய்தி தொகுப்பு : அதிரை நியூஸ் 
தகவல் மற்றும் புகைப்படங்கள் : 'அதிரை புதியவன்' ஹசன்





No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.