.

Pages

Wednesday, October 9, 2013

அதிரையில் TMJK நடத்திய மாபெரும் முற்றுகை போராட்டம் ! 50 க்கும் மேற்பட்டோர் கைது !

அதிரை ஈசிஆர் சாலையில் உள்ள மதுக்கடைகளை அகற்றவும் அரசு உரிமம் பெறாத மதுக்கடைகளை நடத்தும் அரசியல்வியாதிகள் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பாக இன்று காலை 11 மணியளவில் மாபெரும் முற்றுகை மற்றும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக TMJK கட்சி அலுவகலத்திலிருந்து கட்சி துணைப் பொதுச்செயலாளர் A.J. ஜியாவுதீன் அவர்களின் தலைமையில் போராட்டக்காரர்கள் மதுக்கடைகளை நோக்கி புறப்பட்டனர்.

இதையடுத்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த டிஎஸ்பி வெங்கடேசன், தலைமையில் இன்ஸ்பெக்டர் செங்கமலக்கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்டோரை கைது செய்து இரண்டு வேன்கள் மூலம் லாவண்யா திருமண மண்டபத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தகவலறிந்த பட்டுக்கோட்டை கோட்டாட்சியர், தாசில்தார்,  டிஎஸ்பி, வருவாய்துறை அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனால் இந்தப் பகுதி முழுதும் பரப்பரப்பாக காணப்பட்டன.









7 comments:

  1. நல்லதொரு மக்கள் பிரச்சனைக்காக சிறை சென்ற உங்களுக்கு பாராட்டுகள் - வாழ்த்துக்கள்.

    இதுபோன்ற சமூகத்திற்கு தீமை தருகின்ற மதுபானக் கடைகளை அரசு அப்புறப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

    ReplyDelete
  2. ஜியவுத்தினுக்கு பெரிய ஸ்டாலினு நினைப்பு. இத்துடன் ஆயிரத்தி ஒன்றாவது கச்சி.






    ReplyDelete
  3. உங்களுடைய போராட்டம் குடிகாரனுக்கு வெறுப்பை வரவலைக்கும்.

    ஸ்டாலின் கூட செய்யமுடியாததை நீங்கள் செய்துமுடிதுருகிரீர்கள். எல்லா மதத்துக்கும் பொது எதிரி - மது

    ReplyDelete
  4. ஜியாவுதீன் கட்சியை சேர்ந்தவர்கள் பள்ளிக்கூடத்துக்குச் சென்ற மாணவர்களை வழியில் மறைத்து ஆர்பாட்டத்தில் சேர்த்துள்ளாராம். இப்படியெல்லாம் செய்து மாணவர்களின் மதிப்பையும், படிப்பையும் கெடுப்பவர்கள் எப்பொழுதான் திருந்துவார்களோ?
    மாணவர்களின் பெற்றோர்களே......... உசார்!...... உசார்!!!!!!

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நடத்திய மதுவுக்கு எதிரான ஆர்பாட்டத்திற்கு பாராட்டுக்கள், ஆனால் அவர்கள் அரங்கேற்றிய அடாவடிச்செயல் அவர்களின் மேல் சிறிதளவாயினும் இருந்த நம்பகத்தன்மையை இழக்கச்செய்துவிட்டது.

    மது அருந்துவது ஓர் பாவச்செயல், அதை விட கொடூரச்செயல் ஒரு மனிதனை துன்புறுத்துவதாகும், காரணம் ஒரு மனிதனை தகுந்த காரணமில்லாமல் துன்புறுத்தினால் அவர் மன்னிக்காதவரை இறைவன் மன்னிக்கமாட்டான் என்று இஸ்லாம் கூறுகிறது.

    கட்சியை வளர்பதற்காக மக்களின் கவனத்தை தங்கள் பக்கம் ஈற்று, சமூகத்தில் நாங்களும் கட்சி நடத்துகிறோம் என்பதை மக்களுக்கு அறியப்படுத்தி விளம்பரம் தேட துடிக்கிறார்கள்.

    தயவு செய்து திருத்திக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  7. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவர்க்கும் பாராட்டுக்கள் மது மாது சூது இவை மூன்றில் எதாவது ஓன்று ஒரு வீட்டுக்குள் புகுத்தால் அந்த குடும்பம் அவுமான பட்டு அசிங்க பட்டு நடுத்தெருக்கு வந்து விடும்.ஆதலால் அனைவரும் இது போன்று ஆர்பாட்டகளில் கலந்து கொள்ளவும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.