.

Pages

Tuesday, November 26, 2013

அதிரை பேரூராட்சி தலைவருக்கு எதிராக சதியா !?

அதிரை பேரூராட்சி தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பதவியேற்றவர் S.H. அஸ்லம். அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக துப்புரவு தொழிலாளராக பணியாற்றி வருபவர் பன்னீர். தன்னை சாதியின் பெயரைச்சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டியதாக சொல்லி அதிரை பேரூராட்சி தலைவர் மீது வன் கொடுமை வழக்கு பதிவு செய்ய காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளதை அடுத்து பேரூராட்சி தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேரூராட்சி தலைவரோடு தொடர்புடைய அவரது நண்பரிடம் விசாரித்த வகையில்...
நமதூர்  பேரூராட்சி தலைவராக ஜனாப் அஸ்லம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அதிராம்பட்டினம் பேரூராட்சி மிகப்பெரிய மாற்றத்தை பொதுமக்கள் அனைவருமே உணர்ந்திருக்கிறார்கள்.

சுத்தம் சுகாதாரம் என்ற கொள்கையில் முழு முயற்சியாக பேரூராட்சி ஈடுபட்டு ஊழலற்ற நிர்வாகத்தை தர நமதூர் பேரூராட்சி தலைவர் அஸ்லம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் மக்கள் அறிந்ததே.

தவறுகளை சுட்டி காட்டினால் ஏற்றுக்கொள்ளும் பக்குவம், கூப்பிட்ட குரலுக்கு ஊர் பிரச்சினைகளை தீர்க்க முன்னிற்கும் ஆர்வம் போன்றவைகளால் பேரூராட்சி தலைவர் அஸ்லம் பாராட்டுக்குரியவராக இருக்கிறார். இதனை பொறுக்காத சிலர் அவர் மீது அவதூறுகளை சுமத்தியும், வீண் பொய்களை பரப்பியும் வருகின்றனர். இவர் மீது பொய் வழக்கும் நேற்று பதியப்பட்டு ஜாமீனுக்காக காத்திருக்கிறார்.

இவரது வளர்ச்சி பொறுக்காத சிலரே ஆளும் கட்சியின் உதவியுடன் தமது அதிகாரத்தை துஷுபிரயோகம் செய்து இவரை செயல்படாமல் தடுக்க முயற்சித்து வருகின்றனர். மேலும் இவர் சிறுபான்மை இனத்தவர் என்பதாலும் இவரை இந்த பணியை செய்யவிடாமல் தடுக்க  ஒரு பிரிவினரும், இவரது வளர்ச்சியை பொறுக்காத ஒரு சில எதிர்கட்சியினரும் பொய் வழக்குகளை போட்டு இவரது பணியை முடக்கி அதிராம்பட்டினத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றனர்.

இதனை பொதுமக்கள் உணர்ந்து உண்மையை தெரிந்து இதுபோன்ற நயவஞ்சகர்களை அடையாளம் கண்டு கொண்டு புறக்கணிக்க வேண்டும் என முடித்துக்கொண்டார்.

சம்பவம் குறித்து அறிந்து கொள்ள பன்னீர் அவர்களை தொடர்புகொண்ட போது நமது முயற்சி பலனளிக்கவில்லை. 

11 comments:

  1. நம்முடைய சமுதாய இயக்கமே சேர்மன் மீது பொய் வழக்கு போடும்போது மற்றவர்கள் சும்மாவா இருப்பார்கள்

    ReplyDelete
  2. பன்னீர் பொய் வழக்கு போட்டார் என்று இப்போது எழுதும் இனைய தளங்கள் 2 மாதங்களுக்கு முன்பு சேர்மன் மீது ஒருவர் பொய் வழக்கு போட்டார் அதை ஏன் எழுதவில்லை பொய் வழக்கு போட்டவருக்கு ஒரு இயக்கத்தில் பதவியும் கொடுத்தார்கள் அப்போது நீங்கள் என செய்து கொண்டுயிருந்தீர்கள்

    ReplyDelete
  3. யார் மீது கோபப்பட
    யாரை குற்றம் சொல்ல
    யாருக்கு அறிவுரை சொல்ல
    இளஞர்கள் இந்த நாட்டின் தூன்கள் என்கிறோம்
    அவர்களிடம்தான் இந்த அரசியல் பாடாய் படுகிறது

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    ஈரான் அமெரிக்க விவகாரமே சுமூக பேச்சில் முடியும்போது, இது என்ன?

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  5. எங்கள் மார்க்கத்தில் ஜாதி இல்லை, அப்போ எங்கள் மார்க்கத்தில் உள்ளவர் எப்படி உங்கள் மதத்தில் உள்ள ஜாதி பெயர் கூறி அலைபார்?

    Fazee Canada

    ReplyDelete
  6. 40 ஆண்டு காலம் நமதூரில் யாரும் சேர்மன் மீது வழக்கு தொடரும் அளவுக்கு தையிரியம் இருந்ததில்லை அந்த கண்ட்ரோல் ஒரு பயம் இருந்தது அது இப்போது இல்லை தட்டி கொடுக்க வேண்டிய நேரத்தில் தட்டி கொடுதும் தட்ட வேண்டிய நேரத்தில் தட்டியும் அரவணைக்க வேண்டிய நேரத்தில் அரவணைத்தும் ஒரு ஆளுமையுடன் நம் முன்னோர்கள் ஆட்சி செய்தார்கள் அது தற்போது இல்லை

    ReplyDelete
  7. அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் நம் சேர்மனுக்காக

    ReplyDelete
  8. துப்புரவு தொழிலாளி பேரூராட்சி தலைவர் மீது வழக்கு?
    அதிரை வரலாற்றில் இது புதுமையாக உள்ளது.????

    ReplyDelete
  9. தலைமை பதவி வகிப்பவர்கள் தன்னுடைய அதிகாரத்தை கொண்டுதான் தமக்குகீழ் உள்ளவர்களை வேலை வாங்க முடியும் அவ்வாறுதான் சேர்மன் செய்து இருப்பார் அவர் பதவியேற்ற நாள் முதல் இன்று வரை சுபுஹ் தொழுகை முடித்த உடனே அவரை பேரூராட்ச்சி அலுவலகத்தில் நான் பார்ப்பது உண்டு அவரே நேரில் வந்து ஊழியர்களை தெருவாரியாக வேலை வாங்குவார். சில நேரங்களில் வேலைப்பார்க்கும் இடங்கலுக்கு சென்று ஆய்வு செய்வார். இப்படிப்பட்டவர் சகோதரார் பன்னீர் அவர்களை இவ்வாறு அழைத்திருப்பாரா?

    ReplyDelete
  10. இது ஒரு அரசியல் சூழ்ச்சியே

    ReplyDelete
  11. துப்புரவு தொழிலாளி பேரூராட்சி தலைவர் மீது வழக்கு?
    அதிரை வரலாற்றில் இது புதுமையாக உள்ளது.????

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.