செல்போனில் பேஸ்புக், வாட்ஸ்அப் வசதி வந்தவுடன் பல்வேறு தகவல்கள் உடனடியாக அப்லோடு செய்யப்பட்டு பல்வேறு செல்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. சென்னையில் உதவி கமிஷனர் ஒருவர் பெண் போலீசுடன் ஆபாசமாக பேசிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது பேராவூரணி தொகுதி எம்.எல்.ஏ.வை கிண்டல் செய்து பேஸ் புக்கில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி தொகுதி எம்.எல்.ஏ. வாக இருப்பவர் அருண்பாண்டியன். பிரபல நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான இவர் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பராக இருந்தார்.
சட்ட மன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைத்து போட்டியிட்ட போது பேராவூரணி தொகுதி தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் இலஞ்சி பகுதியை சேர்ந்தவரும் சென்னையில் வசித்து வருபவருமான நடிகர் அருண்பாண்டியன் இங்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
தேர்தல் பிரசாரத்தின் போது நான் வெற்றி பெற்றால் பேராவூரணியில் வீடு எடுத்து தங்கி இருந்து மக்கள் பணி ஆற்றுவேன் என அருண்பாண்டியன் கூறினார்.
வெளியூர் வேட்பாளர் என்றாலும் அ.தி.மு.க. வினர் தீவிரமாக பணியாற்றி அருண் பாண்டியனை வெற்றி பெற செய்தனர்.
வெற்றி பெற்ற சில மாதங்களிலே கட்சி தலைவர் விஜயகாந்தை எதிர்த்து கொண்டு அ.தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏ.வாக செயல்பட தொடங்கினார்.
இந்த நிலையில் இவர் தொகுதி பக்கம் தலை காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 4 ஆண்டுகளில் இவர் சுமார் ஏழெட்டு முறை மட்டுமே தொகுதியில் தலை காட்டியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
தொகுதியில் நிலவும் பிரச்சினை குறித்து முறையிட அவரது எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு சென்றால் உங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி தாருங்கள். நாங்கள் ஆன் லைனில் அனுப்பி விடுகிறோம் என்று கூறுவதாக பொதுமக்கள் புலம்பினார்கள்.
நாங்கள் நேரில் பார்க்க முடியாத எம்.எல்.ஏ. எதற்கு என்று வேதனையுடன் குறிப்பிட்டனர். இந்த நிலையில் பேஸ்புக் மற்றும் வலை தளங்களில் எம்.எல்.ஏ.க்கு எதிராக பதிவுகளை வாலிபர்கள் சிலர் உலா விட்டுள்ளனர்.
பேஸ் புக்கில் காணாமல் பேனவர் பற்றிய அறிவிப்பு. தொகுதி எம்.எல்.ஏ. அருண்பாண்டியனை காணவில்லை. கண்டு பிடித்து தருபவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் பரிசு என கிண்டலடித்து பதிவு செய்துள்ளனர்.
இப்பதிவு இப்பகுதி மக்களிடமும், இங்கிருந்து வெளிநாட்டில் வசிப்பவர்களிடமும் காட்டு தீ போல் பரவி வருவதாக இப்பகுதி வாலிபர்கள் தெரிவித்தனர்.
நன்றி:மாலைமலர்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.