பெண்களுக்கு தராவீஹ் தொழுகை நடத்தப்படும் வீடுகளில், தொழுகைக்கு வரும் பெண்களுக்கு எவ்வித சிரமும் ஏற்படுத்தாத வகையில், ஒளு செய்ய தண்ணீர் வசதி, மின் தடை ஏற்பட்டால் அதற்கு இன்வேட்டர் வசதி இன்னும் மின்விசிறி வசதி என தொழுகை நடக்கும் வீட்டினர் ஏற்பாடு செய்து வைத்துள்ளனர்.
ஆனால் இதையும் மீறி தற்போது தமிழகத்தில் அவ்வப்போது ஏற்படும் மின் தடை காரணமாக் இன்னவேட்டர்களில் சில நேரங்களில் அதன் சக்திக்கு மேல் சார்ஜ் நிற்பதில்லை. மேலும் சில நேரங்களில் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு விடுகிறது. இவை அனைத்தும் வேண்டுமென்றே நடப்பதல்ல எனினும் சில தவிர்க்க முடியாத சூழல்கள் இதுபோன்ற அசவுகரியங்களை ஏற்படுத்தி விடுகின்றன.
மேலும் வீடுகளில் பெண்களுக்கு மட்டுமே தொழுகை நடப்பதால் ஆண்கள் தொழுகைக்காக பள்ளிகளுக்கு சென்றுவிடுவதால் இதுபோன்று திடீரென ஏற்படும் சிரமங்களை சரிசெய்ய இயலாம பெண்கள் தடுமாறுவதையும் உணர முடிகின்றது.
ஆனால் இதனை சில பெண்கள் புரிந்துகொள்வதில்லை. தொழுகைக்கு வந்தாலும் இதைகுறித்து குறை கூறி தொழுகை நடக்கும் வீட்டினை புறக்கணிக்கும் தன்மையும் ஏற்படுவதாக கேள்வியுறுகிறோம்.
நவீன காலத்திற்கு முன்பே நம் முன்னோர்கள் மின்சாரமின்றியும் இதர வசதிகள் இன்றியும் வாழ்ந்த சூழல்களில் எண்ணை விளக்குகளை மட்டுமே துணையாகக் கொண்டு பள்ளிகளிலும், வீடுகளிலும் தொழுகையை நிறைவேற்றி வந்துள்ளனர். இது இன்னும் சில வசதியற்ற கிராமங்களில் கூட தொடர்ந்துகொண்டுதான் உள்ளன.
ஆனால் பல வசதிகளை அனுபவித்துவிட்ட நாம் இதுபோன்ற சிறு சிரமங்களை பொறுத்துக் கொள்ள இயலாத நிலை ஏற்பட்டு விடுகின்றது. இது எல்லா வீடுகளிலும் இல்லை மேலும் பலர் இதனை பெரிதுபடுத்தாமல் தொழுகையே கண் என்று இருந்து நண்மையை மட்டுமே இலக்காக தொழுகையை நிறைவேற்றுகின்றனர். ஆனால் சிலர் இதனை பெரிதுபடுத்தி சில சலசலப்புகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.
ஆனால் இதுபோன்று சில சூழல்கள் அமையலாம் என உணர்ந்துள்ள அனுபவஸ்தர்கள் வீட்டிலேயே ஒளு செய்தல் உட்பட பல தேவைகளை முடித்துக் கொண்டு தொழுகைக்காக தயார் நிலையில் வந்துவிடுகின்றனர். இதை நாம் அனைவரும் உணர வேண்டும்.
நண்மையை பலமடங்கு கொள்ளையடிக்கும் இம்மாதத்தில் மாறாக சிறு விசயங்களுக்காக தீமையை சம்பாதித்துவிடாமல் நம் அனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக.
இப்னு ஹசன்
நல்ல நினைவூட்டல். சிறந்த எச்சரிக்கை
ReplyDeleteசிறந்த நினைவூட்டல் !
ReplyDeleteசகிப்புத்தன்மை அவசியம். குறிப்பாக ரமலான் நேரத்தில் மிகஅவசியம்.