தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் ராஜராஜன் வணிக வளாகம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் புதிய ஆர்கானிக் புடவைகள் சிறப்பு கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
கண்காட்சியில் முதல் விற்பனையையும் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் புதிய ஆர்கானிக் கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. ஏழை நெசவாளர்களின் வாழ்க்கை தரம் உயருவதற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். நெசவாளர்கள் வாழ்வாதாரம் உயருவதற்காக அவர்கள் தயார் செய்துள்ள தரமான புடவைகளை விற்பனை நிலையங்கள் மூலம் தள்ளுபடி விலையில் விற்கின்றனர்.
பாரம்பரியமிக்க கோ-ஆப்டெக்ஸ் கைத்தறி நிறுவனம், கைத்தறி நெசவாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் 80 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான சேவையாற்றி வருகிறது.
வாடிக்கையாளர்களின் இரசனையினையும், அவசிய தேவைகளையும் அவ்வப்போது அறிந்து தேவைக்கேற்ப புதிய இரகங்களையும், வடிவமைப்புகளையும் உருவாக்கி, சந்தையில் ஏற்படும் போட்டிகளை எதிர்கொள்ளும் வகையில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் புதிய உத்திகளும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கைத்தறி பருத்தி இரகங்களில் தனி முத்திரை பதித்து வருகின்ற கோ-ஆப்டெக்ஸ், தற்போது முதன் முறையாக பருத்தி சாகுபடியில் முற்றிலும் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி விளைவித்த பருத்தியை கொண்டு தயாரித்த நூலினை, இயற்கையில் கிடைக்கும் இலை, பூக்கள், விதைகள் காய்கள், மரப்பட்டைகள், உதாரணமாக மஞ்சள், சங்கு, பூ, கரிசலாங்கண்ணி கீரை, கருங்காலி மரப்பட்டை, செவ்வாழை பூ போன்றவற்றை கொண்டு இரசாயனக் கலப்பில்லாமல் சாயம் தோய்த்து ஆர்கானிக் சேலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இயற்கை பருத்தியில், இயற்கை சாயம் தோய்த்த இந்த ஆர்கானிக் சேலைகள் ரூ.2500 முதல் ரூ.3200 வரை விலையில் கிடைக்கும். பொது மக்கள் வாங்கி ஏழை நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர உதவிட கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
கண்காட்சி தொடக்க நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் திரு.ம.சண்முக சுந்தரம், மேலாளர்கள் திரு.ஜி.பாலு, திரு.எம்.எ.பாலகிருஷ்ணன், திரு.ஆர். சீனிவாசன், மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.