கடந்த 2005ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள அவகாசம் டிசம்பர் 31 வரை காலக்கெடு நீடிகப்பட்டுள்ளது. கடந்த 2005ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்து கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிவித்தது. இதற்கான இறுதி கெடு கடந்த ஜனவரி 1ம் தேதி வரை இருந்தது. இருப்பினும் பெரும்பாலானோர் இந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றவில்லை. பின்னர் இந்த மாதம் 30ம் தேதி வரை காலக்கேடு நீட்டிக்கப்பட்டது.
ஆனால் தற்போது டிசம்பர் 31 வரை நீடிகப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களின் பின்புறம், அந்த நோட்டு எந்த ஆண்டு அச்சிடப்பட்டது என்ற விவரம் இருக்காது. இதை வைத்து பொதுமக்கள் எளிதாக அதை அடையாளம் கண்டு கொள்ளலாம். போலி ரூபாய் நோட்டுக்களை தடுக்கவும், பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டே திரும்பப்பெறும் நடவடிக்கையை எடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. வங்கிகளும் 2005க்கு முந்தைய நோட்டுக்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருந்தது.
பொதுமக்கள் வங்கிகளில் எத்தனை ரூபாய் நோட்டு வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். எண்ணிக்கையில் எந்த கட்டுப்பாடும் இல்லை. ரூபாய் நோட்டுக்களை எந்த வங்கியில் வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். அவ்வாறு மாற்றுபவர் வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. 2005க்கு முந்தைய நோட்டுக்களுக்கு பதில் வேறு நோட்டுக்களை வாங்கிக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
நன்றி:தினகரன்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.