.

Pages

Tuesday, June 23, 2015

சவூதியில் இறந்த வாலிபர்களின் குடும்பத்திற்கு நிலுவைத்தொகையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார் !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக்கூட்ட அரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள்  தலைமையில் இன்று (22.06.2015) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, கல்விக் கடன், மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம்  நேரில் அளித்தனர். இம்மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை விபரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்கவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

தஞ்சாவூர் வட்டம் மற்றும் பூதலூர் வட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ்  உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் திருமணம் மற்றும் இயற்கை மரணம் ஈமச்சடங்கு 22 பயனாளிகளுக்கு ரூ.2 இலட்சத்து 31 ஆயிரம் மதிப்பில் காசோலைகளையும், சவுதி அரேபியாவில் பணியாற்றிய போது இறந்த பட்டுக்கோட்டை வட்டம், புலவஞ்சி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மகன்  திரு. சின்னக்கண்ணு அவர்களுக்கு சேர வேண்டிய நிலுவைத்தொகை ரூ.9 இலட்சத்து 76 ஆயிரத்து 655 க்கான காசோலையினையும், சவுதி அரேபியாவில் பணியாற்றிய போது இறந்த பட்டுக்கோட்டை வட்டம், நாடியம்பாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் மகன்  திரு. சண்முகசுந்தரம் அவர்களுக்கு சேர வேண்டிய நிலுவைத்தொகை ரூ.60 ஆயிரத்து 512க்கான காசோலையினையும் மற்றும் 13 புதிய குடும்ப அட்டைகளையும்  மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் வழங்கினார்.

மாற்றுத்திறனாளி ஒருவர் மனு அளித்த இன்றே தகுதியின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு ரூ.800 மதிப்பிலான ஊன்றுக்கோல்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

ஆக மொத்தம் 25 பயனாளிகளுக்கு ரூ.12 இலட்சத்து 68 ஆயிரத்து 967 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.சந்திரசேகரன், துணை ஆட்சியர் திருமதி. ஜனனி சௌந்தர்யா, நலிந்தோர் நலத்திட்ட தனி வட்டாட்சியர் திரு.எஸ்.ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.கங்காதரன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு.ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
 
 
 

1 comment:

  1. மக்கள் பணியில் கவனம் செலுத்தும் மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.