.

Pages

Saturday, June 27, 2015

தஞ்சையில் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி [ படங்கள் இணைப்பு ]

தஞ்சாவூர் விமானப் படை நிலையத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்தை யொட்டி, இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் சாகசக் குழுவினரின் வானில் சாகசம் நிகழ்த்தும் நிகழ்ச்சி இன்று காலை 8.30 மணிமுதல் 9.15 மணி வரை நடைபெற்றது. 4 ஹெலிகாப்டர்கள் ஆகாயத்தை வட்டமிட்டு பல்வேறு சாகசங்களை செய்து காட்டின. ஒரு விமானத்தில் 10 பேர் சென்று பாராசூட் மூலம் கீழே குதித்தனர்.

உலகிலேயே இரு ஹெலிகாப்டர் சாகசக் குழுவினர் வானில் ஒரே நேரத்தில் ஹெலிகாப்டர்களை கொண்டு சென்று சாகசம் நிகழ்த்துகின்றனர். அதில், ஒன்று இந்திய விமானப் படையைச் சேர்ந்த மயில் என்கிற ஹெலிகாப்டர் சாகசக் குழுவினர். மற்றொன்று இங்கிலாந்து ராணுவத்தின் நீல கழுகுகள் குழுவினர் ஆவார்கள்.

இந்த நிகழ்ச்சியில் தஞ்சை விமான தள அதிகாரி ஷிண்டே, கலெக்டர் சுப்பையன் டி.ஐ.ஜி.சஞ்சய்குமார் மாவட்ட வருவாய் அதிகாரி சந்திரசேகர் மற்றும் 1000 த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.