சங்கை மிகு ரமலான் மாதத்தில் அதிரையர் பலர் நோன்பு திறப்பதற்காக எண்ணெய்யில் பொரித்து எடுக்கும் பலகாரங்களை ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர். மேலும் உற்றார் - உறவினர் நண்பர்களுக்காகவும் வாங்கிச் செல்ல மறப்பதில்லை. இதனால் கடைகளைச் சுற்றி காணப்படும் பகுதி முழுவதும் மாலை நேரங்களில் கூட்டமாகவும், பரப்பரப்பாகவும் காட்சியளிக்கின்றன. மேலும் வாடா, சமூசா, பஜ்ஜிக்கடைகளுக்கு போட்டியாக கபாப் கடைகளும் ஆங்காங்கே தென்படுகின்றன.
இவ்வாறு அதிரையில் பரபரப்பாக விற்பனையாகும் 'றாலு வச்ச வாடா'வின் ஒனர்களோடு நமது அதிரை நியூசின் ஆஸ்த்தான பங்களிப்பாளர் - அதிரை சாகுல் அவர்களின் வயிறு குலுங்க வைக்கும் கலகலப்பான ஒரு நேர்காணல்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteசங்கை மிகு சஹர் ரமலான்.
2013-ல் எடுக்கப்பட்ட இந்த வீடியோ 2015-லும் வாசம் மாறாமல் இருக்குது, ஆனால் 2013-ல் இருந்த தரத்திற்கும் சுவைக்கும், 2015-ல் இருக்கின்ற தரத்திற்கும் சுவைக்கும் இனி ஏணி வைத்தாலும் எட்டாது.
மேலும் விலையும் இப்போது உயர்ந்து உள்ளது. தரம் சுவை குறைந்து விட்டது.
மக்களின் வாங்கும் அளவும் அதிகரித்து விட்டது.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.