.

Pages

Saturday, June 27, 2015

படுகொலை செய்த இன்ஸ்பெக்டரை கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் !

வேலூர் மாவட்டம், ஆம்பூரைச் சேர்ந்தவர் ஷமீல் அஹமது (26). இவரை ஒரு வழக்கு தொடர்பாக அப்போது பள்ளிகொண்டா காவல் ஆய்வாளராக இருந்த மார்ட்டீன் பிரேம்ராஜ் கடந்த இரு வாரங்களுக்கு முன் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ரகசிய இடத்தில் வைத்து விசாரணை என்ற பெயரில் இளைஞர் சித்ரவதை செய்யப்பட்டதால் காயமடைந்த ஷமீல் அஹமது ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், வெள்ளிக்கிழமை மாலை இறந்தார்.

இந்நிலையில் ஷமில் அஹமதை படுகொலை செய்த இன்ஸ்பெக்டர் மார்டினை கொலை வழக்கில் கைது செய்ய வலியுறுத்தி இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு முன்பு இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினரும் பங்குகொண்டனர்.

செய்தியாளர்களிடம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் எஸ்.எம்.பாக்கர் பேசியதாவது:
''இன்ஸ்பெக்டர் மார்டினை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிபந்தனையின்றி போதுமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்'' மேலும் 'உயர் அதிகாரிகள் மார்டின் மீது உண்மையிலேயே நடவடிக்கை எடுக்க விரும்பினால் அதற்கு முதல் நடவடிக்கையாக மார்டினை இ.பி.கோ 302 பிரிவின் கீழ் கைது செய்ய வேண்டும்'' என்றார்

இந்த ஆர்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். சில மணிநேரங்கள் போக்குவரத்து தடைபட்டது.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.