துபாய் நாட்டில் டிரக் வாகனம் ஒட்டி வருபவர் முஹம்மது மசூத். இவர் பிற்பகல் வாகனம் நெருக்கடி மிகுந்த பகுதியில் தனது டிரக் வாகனத்தை ஓட்டிச்சென்றுள்ளார். வாகனத்தில் திடீரென ஏற்பட்ட பழுதால் நகர முடியாமல் சாலையில் நின்று விட்டது. வாகன ஓட்டுனர் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தார். அப்போது இந்த சாலை வழியே ரோந்தில் ஈடுபட்ட துபாய் போலீஸ் சாலையில் நகர முடியாமல் நின்றுகொண்டிருந்த வாகனத்திற்கு உதவ முன்வந்தார். உடனே வாகனத்தின் பின்புறமாக சென்று தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தி வாகனத்தை தனது இரு கரங்களால் தள்ளி அப்புறபடுத்த உதவினார். இதன் பிறகு வாகனம் நெருக்கடியான பகுதியிலிருந்து பார்க்கிங் பகுதிக்கு நகர்ந்து சென்றது. துபாய் போலீஸின் தானாக முன்வந்து உதவும் மனிதநேயப் பணியை டிரக் வாகன ஓட்டுனர் உட்பட அந்த சாலை வழியே சென்ற ஏராளமானவர்கள் பாராட்டிச் சென்றனர்.
செய்தி தொகுப்பு: அதிரை நியூஸ்
Source: Emirates247
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.