ஒரத்தநாடு வட்டம் நடுவூர் கால்நடை பண்ணை சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் தீவன வளர்ப்பு மற்றும் புதிய கால்நடை கொட்டகைகள், உழவர் பயிற்சி மையம் ஆகியவற்றை அரசு செயலர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் கோ.4, கினியாபுல், கௌசி-காரமணி, ஆகிய புல் வகைகள் பயிரிடப்பட்டுள்ளதை பார்வையிட்ட அரசு செயலர் மேலும் 400 ஏக்கரில் பயிரிட கால் நடை பராமரிப்புத்துறையினருக்கு உத்தரவிட்டார். இவற்றிற்கு தேவையான தண்ணீர் வசதிகளை வேளாண்மை பொறியியல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளை தொடர்ந்து தண்ணீர் குறையாமல் பராமரிக்க அறிவுரை வழங்கினார்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள பயிற்சி மைய கட்டிடத்தையும் பார்வையிட்ட அரசு செயலர் சினை மாடுகள் கூடம், கறவை எருமைகள் மையம் மற்றும் கன்றுகள் மையம் ஆகியவற்றை ஆய்வு செய்து அவற்றிற்கான உணவுமுறைகளை கேட்டறிந்தார். கூடங்களை தினந்தோறும் காலையிலும், மாலையிலும் சுத்தம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இங்கு செயல்பட்டு வரும் மாடுகளின் சணத்திலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரம் தயார் செய்யும் முறையினையும் பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து ஈச்சங்கோட்டை உயிரின கால்நடை பெருக்கு பண்ணையில் ஆய்வு செய்த அரசு செயலர் அவர்கள் கூடுதலாக 80 இலட்சம் கால்நடை விரையுந்து தயார் செய்யக்கூடிய அளவிற்கு அலுவலர்கள் விரைவாக செயல்பட வேண்டும். பொதுப்பணித்துறையினர் கால்நடை கொட்டகைகளை தரமாக அமைத்து பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார். மேலும், 50 ஏக்கர் பரப்பளவில் தீவன அபிவிருத்தி பணிகளையும் பார்வையிட்டு குறைந்த வயதுடைய புல்களை வளர்க்க அறிவுரை வழங்கினார்.
ஒரத்தநாடு கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வகங்கள், வகுப்பறைகள், மாணவ மாணவியரின் விடுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த அரசு செயலர் அவர்கள் மாணவ மாணவியர்களிடம் கல்வி குறித்து கலந்துரையாடினார். கல்லூரியின் அணுகு சாலை, தோட்டப் பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் விரைந்து முடிக்க பொதுப்பணித் துறையினருக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின் போது கால்நடை அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் டாக்டர். கே.என்.செல்வகுமார், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் டாக்டர் ஆர்.செல்வவிநாயகம், பொதுப்பணித்துறை, வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
சுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் ஆடு,மாடு,கோழி போன்ற பண்ணை சார்ந்த தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்துதரப்படும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்-9944209238
ReplyDeleteசுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் ஆடு,மாடு,கோழி போன்ற பண்ணை சார்ந்த தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்துதரப்படும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்-9944209238
ReplyDelete